Latest News

நைட் தூங்கும் போது இருந்தது வெறும் 17 ரூபாய் …. விடிஞ்சு பாத்தா டெபாசிட் ஆன 100 கோடி.. எங்கிருந்து வந்தது? தினக்கூலிக்கு அடிச்ச லக் !

மேற்கு வங்காளத்தில் தினசரி கூலித் தொழிலாளி தன் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொகையைத் தனது வங்கி கணக்கில் பார்த்துள்ளார். முகமது நசிருல்லா மண்டல் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி திடீரென டெபாசிட் ஆனது மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என 2016 ஆம் ஆண்டில் அறிவித்த போது பலரின் கணக்கில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் ஆனாது யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ தெரிவித்த நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

தினசரி கூலித் தொழிலாளியான முகமது நசிருல்லா மண்டல் என்பவரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது எனத் தனது வீட்டுக்கு சைபர் செல் துறை அனுப்பிய அறிக்கை மூலமாக தெரிந்துக்கொண்டது தான் அதிர்ச்சி அளிககும் விஷயம். இதுவரையில் ஏழ்மையில் தவித்து வந்த முகமது நசிருல்லா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார் என்றால் மிகையில்லை.

தேகானா சைபர் செல் மே 30-ம் தேதி முகமது நசிருல்லா மண்டல்-ஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகவும் அவருடைய வங்கிக் கணக்கில் திடீரெனச் 100 கோடி ரூபாய் பணம் சேர்த்தது குறித்து விசாரிக்கச் சம்மன் அனுப்பியுள்ளது. இதில் 100 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார் என்று மகிழ்ச்சி அடைவதை தாண்டி சைபர் செல் அனுப்பியுள்ள சம்மன் தான் அவரைப் பயமுறுத்தியுள்ளது. முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் இதுக்குறித்துக் கூறுகையில், “காவல்துறையினரிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு நான் தூக்கத்தை இழந்தேன். நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. “எனது வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி இருந்தது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. அது உண்மையில் ரூ. 100 கோடிதான் என்பதை நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன்,” என்று மண்டல் நினைவு கூர்ந்தார்.

இந்தப் பணம் குறித்து விசாரிக்கப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளைக்கு நான் எனது பாஸ்புக்குடன் வங்கிக்குச் சென்றேன். எனது கணக்கில் 17 ரூபாய் இருந்ததாக வங்கி கூறியது. இது கணக்கை பிளாக் செய்யும் முன் இருந்த பேலென்ஸ் தொகை என நசிருல்லா கூறினார். இதைத் தொடர்ந்து தற்போதையே பேலென்ஸ்-ஐ கூகுள் பே மூலம் செக் செய்த போது ஏழு இலக்கங்களைக் கொண்ட தொகையைக் காட்டுகிறது எனக் கூறினார்.

எனது கணக்கில் இந்தப் பணம் எப்படி வந்தது என்று என்னால் சொல்ல முடியாது, நான் தினக்கூலியாக வேலை செய்கிறேன். போலீஸ் வழக்கு அல்லது அடிக்கு பயந்து என் நாட்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் எனத் தானும், அவரது வீட்டில் உள்ளவர்கள் கதறினர். இதனிடையே, நசிருல்லாவின் சேமிப்பு வங்கிக் கணக்கை வங்கி தற்காலிகமாக முடக்கியுள்ளது.

Spread the love

Related Posts

“ப்ளீஸ் என்னோட கணவரை உருவ கேலி செய்யாநீங்க…” உருக்கமாக பேசிய மஹாலக்ஷ்மி

சன் டிவி தொகுப்பாளனி மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திடீரென திருமணம் செய்து கொண்ட போட்டோவை

JUST-IN | தீடீர் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா ?? வெளிப்படையாக உண்மை தன்மையை வெளியிட்ட மத்திய மருத்துவ குழு

திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோன தடுப்பூசி காரணம் என்ற புகாருக்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும்

Latest News

Big Stories