பசுவை வெட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுவை தாக்கியதால்15 முதல் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் 2 பழங்குடியின மக்களை கொலை செய்துள்ளனர். மத்தியபிரதேசம் சையோனி பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது இந்த சம்பவத்தினால் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பஜ்ரங் தள் அமைப்பின் மேல் சந்தேகம் உள்ளதாக காங்கிரஸ் அமைப்பினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் அர்ஜுன் சிங் ககோடியா ஜபல்பூர் – நாக்பூர் நெடுஞ்சாலையின் தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டுள்ளார்.

சியோனி மாவட்டக் கூடுதல் எஸ்.பி எஸ்.கே.மராவி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 15 முதல் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் 2 பழங்குடியின மக்களை தாக்கி படுகொலை செய்திருக்கின்றனர். பசுவை அவர்கள் துன்புறுத்தியதால் இந்த சம்பவம் அரங்கேறியது என்று தெரியவந்து உள்ளது. மேலும் இவர்களை தாக்கிய அந்த நபர்களை நாங்கள் தேடி வருகிறோம். இரண்டு பேரை விசாரணை அடிப்படையில் கைது செய்துள்ளோம். மீதி நபர்களை கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம், ஒரு நபர் மட்டும் காயங்களுடன் தப்பித்திருக்கிறார், மற்ற 2 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதும் தகவல் அறிவிக்கப்படும்” என கூறியிருந்தார்.
