திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக நிர்மல் குமாருக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவு, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பாஜக நிர்வாகி நிர்மல்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதாரங்கள் இன்றி அமைச்சர் மீது வரிசையாக இவர் புகார்களை வைத்தார். அமைச்சர் இந்த ஊழல் காரணமாக ஆதாயம் அடைந்து உள்ளார் என்றும் நிர்மல் கூறினார். ஆதாரங்களை சமர்பிக்காமல் நிர்மல் குமார் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இதை அவர் ட்விட்டாகவும் போட்டு இருந்தார். இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆதாரம் இன்றி எனக்கு எதிராக அவதூறு பரப்பி உள்ளார். அவர் பொய் சொல்கிறார். இதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்நிலையில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக நிர்மல் குமாருக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவு