விக்ரம் படத்தில் மத்த காதல் காட்சிகளில் தலையிடாத லோகேஷ் கனகராஜ் என்னுடைய தலையை வெட்டும் போது மட்டும் சந்தோஷமாக இருந்தார் என ஜாலியாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் விக்ரம் பட நாயகி காயத்ரி.
விக்ரம் படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூல் அளவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் சாதனை செய்தது. அதனால் இந்த படத்தின் வெற்றியை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த படத்தில் காயத்ரி ஒரு சீனில் தலை வெட்டப்பட்டு இறந்து போவார். அந்த சீனை பற்றி ஒரு நேர்காணலில் பேசிய நடிகை காயத்ரி லோகேஷ் கனகராஜ் அவர்கள் என்னுடைய காதல் காட்சிகள் வரும்போதெல்லாம் இப்படி இருங்க அப்படி இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார். அவருக்கும் இந்த சீனுக்கும் சம்பந்தம் இல்லாதது போல சென்று விடுவார்.

ஆனால் அந்த தலை வெட்டப் போகும் காட்சியில் மட்டும் எனக்கு ரத்தம் இப்படி வேண்டும் அப்படி வேண்டும் என்று மிகவும் சந்தோஷப்பட்டு அந்த சீனை காட்சிப்படுத்தினார். அதனால் அவருக்கு காதல் என்பது பிடிக்காது என்று மறைமுகமாக அந்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் நீங்கள் காதல் திரைப்படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு கஷ்டம்தான் என சிம்பிளாக பதிலளித்தார் இதிலிருந்தே தெரிகிறது அவருக்கு அவருக்கும் காதலுக்கும் எட்டாத தூரம் என்று.
