பட்டியலின மக்களை உள்ளே விடாததால் கோவிலுக்கு சீல் வைப்பு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகில் உள்ள மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.

அப்போது அதே ஊரை சேர்ந்த பட்டியலினை இளைஞர்கள் சிலர் கோயிலுக்குள் சென்றுள்ளனர், அவர்களை அப்போது உள்ளே விடவில்லை. ஆத்திரமடைந்த சிலர் பட்டியலின் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கியுள்ளனர். இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இருதரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏழுமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து இரண்டு முறை சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை நேற்று முன்தினம் இதை விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 11 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக வருகின்ற ஐந்தாம் தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேல் பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜ திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் மாவட்ட ஆட்சியர் பழனியின் உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் கீழ் விழுப்புரம் போட்டாசியர் முதல் நிலை உத்தரவு பிறப்பித்து திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்துள்ளார்.

Spread the love

Related Posts

மதுரை ஆதீனத்தை மிரட்டினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் சேகர்பாபுவுக்கு சவால் விட்ட அண்ணாமலை | என்ன பேசினார் ?

மதுரை ஆதீனத்தை மிரட்டுவது அமைச்சருக்கு நல்லதில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை. திருச்சி

Viral Video | காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட ஸ்கூல் மாணவிகள் ?? | முடியை பிடித்து வெறியாட்டம் | இந்திய லெவல் ட்ரெண்டிங் ஆனா வீடியோ

பெங்களூருவில் ஒரு பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சியும் வைரலாக இணைய

சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதல் காரணாமாக 12 ஆம் வகுப்பு மாணவன் மரணம் | நெல்லையை உலுக்கிய சம்பவம்

நெல்லையில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதி மோதலால் ஒரு மாணவன் பலியாகியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே

Latest News

Big Stories