மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ப்ரேமம் படத்தில் நடித்தவர்தான் அனுப்புமா, நடிகர் தனுஷுடன் கொடி, நடிகர்அதர்வாவுடன் தள்ளிபோகாதே படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்டார்அனுப்புமா, ஏற்கனேவே வெளியாகி ஹிட் அடித்த டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் நடித்துவருகிறார், இதில் சித்து ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தினமும் படப்பிடிப்பு வேலைகள் வெற்றிகரமாக நடந்துவந்த நிலையில் இரவுநேர படப்பிடிப்பும் தொடங்கியது தற்போது இருவருக்கு கருத்துவேறுபாடுகள் வந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருவரையும் இயக்குனர் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் இருவரும் சமாதானமாகும் நிலையில் இல்லையாம், இந்நிலையில் தான் பெற்றுருந்த முன் பணத்தையும் அனுப்புமா தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. அனுப்புமா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகை மடோனா செபாஸ்டின் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருவருக்கும் ஏன் திடிர் சண்டை வந்தது என இதுவரை படக்குழுவிற்கு தெரியவில்லையாம். தமிழில் வெளியான கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக குறிப்பிடத்தக்கது
