பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று அதிக சத்தத்துடன் குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது ஒரு புறமிருக்க 24 வருடங்கள் களித்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் ஆட சென்றிருக்கிறது ஆஸ்திரேலியா அணி. அதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது, இந்த இடம் அந்த குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சமயத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நடக்கபோக இந்த கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடக்க படுமா அல்லது வீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.