பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம், இப்போது திரையரங்கில் நல்ல விமர்சனங்கள் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தில்வானியர்களை தாழ்த்தி பேசிய சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை இந்த படத்தை திரை அரங்குகளில் திரையிட நாங்கள் மறுப்பு தெரிவிபோம் என்று பாமக கண்டனம் தெரிவித்து வந்தது.
இதனால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிட இருந்தது. அந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது.