பிடிவாரண்டு குடுக்கப்பட்டும் ஆஜராகாததால் சென்னையில் மீரா மிதுனை கொத்தாக தூக்கியது சைபர் கிரைம் போலீஸ்

பட்டியலின மக்கள் குறித்து கேவலமாக பேசிய வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு மீராமிதுன் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கவர்ச்சி மாடலாக இருந்த மீராமிதுன் அதன் பின்பு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமடைந்தார். மீராமிதுன் பிறகு மக்கள் மத்தியில் ஒரு பெரிய பேசுபொருளாக மாறினார். இவர் நீண்ட நாட்களாக சினிமாவில் இருப்பதாகவும் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் பெரிய பெரிய ஆட்களால் பரிபோனது எனவும் பல பெரிய ஹீரோக்களை இவர் மிகவும் கொச்சையாக பேசுவார். அப்படி இவர் பேசிய சில ஹீரோக்களில் ஒருவர் தான் சூர்யா மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் சகட்டுமேனிக்கு வம்பிழுத்து அவர்கள் ரசிகர்களிடமும் வாங்கி கட்டிக் கொண்டார் மீரா மிதுன்.

சில மாதங்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஒரு வீடியோவை மீராமிதுன் யூட்யூப் வலைதளத்தில் பதிவிட்டார். அப்போது அதில் மீராமிதுன் பட்டியல் இன சமூக மக்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இது மிகவும் ஒரு வெறுப்படைய வைக்கும் செயலாக கருதி இவர் மீது பிசிஆர் மற்றும் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி மீராமிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தனர். பின்பு இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்தனர்.

Spread the love

Related Posts

போட்டோக்கு 2 ஆயிரம், விடீயோ காலுக்கு 30 ஆயிரம், கவர்ச்சியை வைத்து புதிய பிசினஸில் இறங்கிய நடிகை கிரண் | முழு விவரம் என்ன ?

நடிகை கிரண் அவர்கள் தன்னுடைய கவர்ச்சியை வைத்து புதியதாக ஒரு பிஸினஸ் ஸ்டார்ட் செய்து உள்ளார்.

Viral Video | “பாதுகாப்பு கொடுங்கள்” என்று கோரி காதல் கணவனுடன் பெங்களூரு போலீசில் தஞ்சமடைந்த அமைச்சர் சேகர் பாபு மகள்

எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரி, காதல் கணவனுடன் பெங்களூரு போலீசில் தஞ்சமடைந்த அமைச்சர் சேகர்