Latest News

பிரபல நடிகர் இளம் வயதில் திடிரென்று உயிரிழப்பு …சோகத்தில் திரைத்துறை ! முதல்வர் இரங்கல் !

மலையாள நடிகர் சுதி சாலை விபத்தில் சிக்கி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 39.அவருடன் காரில் பயணம் செய்த மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சுதியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிமிக்ரி கலைஞரான கொல்லம் சுதி 2015ம் ஆண்டு இயக்குனர் அஜ்மலின் கந்தாரி திரைப்பட மூலம் சினிமாவில் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இவர் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், குட்டநாடன் மர்ப்பப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகர் கொல்லம் சுதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, கைபமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயரிழந்தார். இவர்களது கார் சரக்கு வகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவருடன் காரில் பயணம் செய்த மிமிக்ரி கலைஞர்கள் பினு அடிமாலு, உல்லாஸ், மகேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை கொடுங்கலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூவரும் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுதியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related Posts

10 ரூபாய் நாணயம் குறித்தான அதிரடி நடவடிக்கை | இனிமே வாங்க மறுத்தா இதான் நடக்கும்

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. கடந்த

தொலைச்சி கட்டிருவேன் பாத்துக்கோ ! நடு ராத்திரியில் ரெய்டு விட்ட அமைச்சர் ! மிரண்டு போன செக் போஸ்ட் போலீஸ் !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் மனோ

2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் | குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் குறிப்பிடபடவில்லை | திமுகவின் சிறப்பம்சங்கள் என்னனென்ன ? | ஒரு அலசல்

2022 முதல் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று

Latest News

Big Stories