பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் காலமானார் இதையடுத்து இளையராஜா வெளியிட்ட பதிவில் இந்திய திரைப்பட இசையுலக வரலாற்றில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீக காந்தக் குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த திரு லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வேதனையை எப்படிப் போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு உலகத்துக்கே இசை உலகிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் திரு ஆஷா ஜி அவர்களுக்கும் திரு இருதயநாத் மங்கேஷ்கர் அவர்களுக்கும் உஷா மங்கேஷ்கர் அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட முறையில் அனுதாபங்களையும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இளையராஜா கூறினார்.
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul… Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice. pic.twitter.com/HEAWKaUTZs
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022