புது பட ரிவியூ | சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்கி படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இன்று சாய்பல்லவி நடித்து, கௌதம் ராமச்சந்திரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் வழங்கியிருக்கும் படம் தான் கார்கி. படத்தில் கதாநாயகியாக வரும் சாய்பல்லவி பெயர் கார்கி என்பதால் படத்தின் பெயரையும் அதையே வைத்திருக்கிறார்கள். சரி படத்தின் கதைக்கு வருவோம்.

எதிர்பாராத ஒரு தவறான இன்வெஸ்டிகேஷன் அடிப்படையில் தனது அப்பாவை ஒரு குற்றத்திற்காக கைது செய்திருக்கும் நீதிமன்றத்தையும், காவல்துறையும் எதிர்த்து ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதை சொல்லும் கதை தான் இது. ஒரு வீட்டில் ஒரு ஆண்மகன் இல்லாவிட்டால் அங்கு இருக்கும் பெண்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்கிற காட்சிகளை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஒரு ஆண் இல்லாத வீட்டில் இன்னொரு ஆண் இரவு நேரத்தில் வருதல் கூடாது எனவும், என்னதான் கட்டிக்க போறவனாக இருந்தாலும் தெருவில் வைத்து கையைப் பிடித்து பேசுவது தவறு என உரைக்கும் கருத்துக்களால் டைரக்டர் அவரின் சமூக பார்வையை கூறியிருக்கிறார். படத்தில் ரேப் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் முகத்தை கடைசி வரை காட்டாமல் இருந்ததற்கே இயக்குனருக்கு ஒரு சல்யூட்.

படத்தின் கதை ஒரு விசாரணை கைதியாக இருக்கும் அப்பாவை காப்பாற்ற போராடும் மகளின் கதை தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் கதையில் சில பல மாற்றங்கள் நடந்து நம்மையே தூக்கி வாரும் போடும் அளவிற்கு இறுதிக் காட்சி இருக்கும். சொல்லப்போனால் இதுவரை நடந்தது எதுவுமே உண்மை இல்லையா அல்லது நாம் பார்த்தது எல்லாம் பொய்யா என நினைக்கும் அளவிற்கு இருக்கின்ற ஒரு இறுதி காட்சி. அதனால் அந்த இறுதி காட்சி எத்தனை பேரை திருப்தி படுத்தும் என்பது கேள்விக்குறியே. ஆனால் படத்தில் இயக்குனர் சொல்ல வந்த கருத்தில் மிகவும் ஆணி தனமாக இருந்துள்ளார் என்பதை படம் பார்க்கும் போது தெரிகிறது.

இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தால் இந்த படம் இன்னும் நன்றாகவும் எந்த இடத்திலும் லாஜிக் மீறல்கள் இல்லாமலும் இருந்திருக்கும். படத்தின் திரைக்கதை முதல் பாதியில் மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் சற்று நகர நேரம் எடுக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சி கொடுத்த அந்த தாக்கம் ஒட்டுமொத்தமாக இந்த படத்தை ஒரு நல்ல படம் என சொல்ல வைக்கும். ஆனால் மீண்டும் சொல்வது ஒன்றுதான் இறுதிக் காட்சி அவரவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ அதுபடி தான் அவர்களுக்கு படம் பிடித்ததா இல்லையா என்பது தெரியும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை இந்த கார்கி படம் அளிக்கும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Kingwoods Rating :- 4/5

Spread the love

Related Posts

“முஸ்லிம்களிடம் சங்கி சேட்டை செய்வது போல தலித்துகளிடம் செய்யாதீர்கள்” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த திருமா

மத்தியில் ஆட்சி இருந்தால் உங்களால் எங்கள் கட்சியை தடை செய்து விட முடியுமா என விடுதலை

புது பட ரிவியூ | பிராபாஸின் ராதேஷ்யாம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

ராஜா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா, சத்யராஜ், ஜெகபதிபாபு போன்றவர்கள் நடித்து இன்றைக்கு திரைக்கு

“எட்டு வழி சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” – திமுக அமைச்சர் எவ வேலு

எட்டு வழி சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை என கூறி தற்போது விமர்சனத்திற்கு

x