புது பட ரிவியூ | துல்கர் சல்மானின் சல்யூட் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இயக்குனர் ரோஷன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து சோனி லிவ் OTT- யில் இன்று வெளியாகியிருக்கும் மலையாள படம் தான் சல்யூட். இந்த பதிவில் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை தான் பார்க்க உள்ளோம்.

100 கொலையாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற ஒன்லைனரை வைத்து எடுக்கப்பட்ட கதை. படத்தின் திரைக்கதை மற்ற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை போல் இல்லாமல் கொஞ்சம் வேறுபடுத்தி இருக்கும். குறிப்பாக இயக்குனர் வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மிகவும் அற்புதம் இதற்குமேல் வில்லனை பற்றி பேசினால் அது ஸ்பாய்லர் ஆக முடியும் அதனால் அதைப் பற்றி பேசுவதற்கு பெரிதாக இல்லை. அடுத்ததாக துல்கர் சல்மானின் நடிப்பு கச்சிதம். எல்லோருடைய கதாபாத்திரமும் அருமை. படத்திற்கு உயிரோட்டம் என்றால் அது இசை தான். மிகவும் ஒரு ஸ்லோ பர்நிங் த்ரில்லராக (Slow Burning Thriller) போகும் இந்த கதை களத்துக்கு முடிந்த அளவு இசையில் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக்ஸ்.

இந்த மாதிரியான கதைக்கு கிளைமாக்ஸ் மட்டும்தான் பெரிய அச்சாணியாக இருக்கும். படத்தின் இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியை முடித்த விதத்தில் தன்னுடைய புதுமையை காட்டியிருக்கிறார். கிளைமேக்ஸ் எப்படி முடியப் போகிறதோ என்ற ஒரு பரபரப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் போது. மிகவும் எளிமையாகவும் நம்பும் படியாகவும் அந்த கிளைமாக்சை முடித்ததற்கு பாராட்டுக்கள்.

திருமணத்திற்கு ஓகே சொன்ன சிம்பு | வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால் கூடிய சீக்கிரம் கல்யாண அறிவிப்பு வெளிவரும் என்று தகவல்

படத்தின் குறைகள் என்று எடுத்துக்கொண்டால் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். ஏனென்றால் மெதுவாக நகரக்கூடிய திரைக்கதை என்பதனால் சில இடங்களில் தொய்வு இருக்கிறதோ என்று தோன்ற வைக்கிறது. அது ஒன்று மட்டும் தான் குறையே தவிர படத்தில் பெரிதாக எதுவும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை.

பொதுவாக மலையாள சினிமா என்று எடுத்துக்கொண்டாலே படம் முழுவதும் ஒரு ஸ்லோனஸ் (Slowness) இருக்கும் அதோடு சேர்த்து நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகவே மலையாள சினிமாவிற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் மற்றபடி தமிழ் மசாலா படம் பார்க்கும் ஆடியன்ஸீர்க்கு இந்த படம் செட் ஆவது கொஞ்சம் கடினம் தான். வேண்டுமெனில் ஒரு ட்ரை செய்து பார்க்கலாம். அனால் இந்த இயக்குனரின் முந்தைய படமான மும்பை போலீஸ் அளவிற்கு இந்த படம் இல்லை.

Kingwoods Rating :- 3/5

Viral Video | முதுகு Exercise விடியோவை பதிவேற்றி ரசிகர்களை மூடு ஏற்றும் டோனி பட நாயகி திஷா பதானி

Spread the love

Related Posts

மின் கட்டண உயர்வு – எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு விலை ? | புதிய பட்டியல்

தமிழகத்தில் தற்போது மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மின்சார ஒழுங்குமுறை

Viral Video | விஜயின் அரபிக் குத்து பாடலை கேட்டு அழுகையை நிறுத்தும் குழந்தை | குட்டி விஜய் Fan

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் பீஸ்ட் இந்த படத்தில் தளபதி விஜய்

மூன்று மாதமாக வலிமை ட்ரைலர் செய்த சாதனையை சில மணி நேரங்களிலேயே தட்டி தூக்கிய பீஸ்ட் | வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் வலிமை படத்தின் டிரைலர் ரெக்கார்டுகளை ஒட்டு

x