புஷ்பாவின் புருஷன்கள் ” தண்ணி வேற அடிப்பாராம் ” இன்னும் பல பேரு இருக்காங்களாம் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தென்புஷ்கரணி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் புஷ்பா.. 34 வயதாகிறது.

வேலை முடிந்து, வீட்டுக்கு வந்துள்ளார் வெங்கடேசன்.. அப்போது வீட்டிற்குள் நுழைந்தால், புஷ்பா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.. இதைப்பார்த்து அதிர்ந்துபோன வெங்கடேசன் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தார்..

Close up of young adult hands holding colored cocktails and toasting in a night club

அதன்பேரில், போலீசாரும், விரைந்து வந்து, புஷ்பாவின் சடலத்தை மீட்டனர்.. அப்போதுதான், புஷ்பாவின் உடம்பெல்லாம் காயங்கள் கிடந்ததை கண்டனர்.. எனவே, அவரை யாராவது அடித்து கொன்று, தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.அதன்படி, அக்கம்பக்கத்தினரிடமும், வெங்கடேசனிடம் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. ஆனால், கொலை தொடர்பாக எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.. அதற்குபிறகுதான், புஷ்பாவின் செல்போனை ஆராய்ந்தனர்.. அந்த செல்போன்தான், கொலையாளியையும் காட்டித்தந்தது..

புஷ்பாவிற்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்து வந்ததாக தெரிகிறது.. அதேபோல, வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. வெங்கடேசன் வேலைக்கு போய்விட்டால், உடனே புஷ்பா தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு போனை போட்டு வரவழைத்து விடுவாராம்.. அப்படித்தான், யோபு என்பவர் புஷ்பாவின் ஆண் நண்பராக இருந்திருக்கிறார்.. திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்த யோபு.. 28 வயதாகிறது.. புஷ்பாவிற்கும் யோபுவிற்கும் திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்து இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. யோபுவிற்கு அவரது வீட்டில் கல்யாண ஏற்பாடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. இதனால், புஷ்பாவிடமிருந்து விலகி இருந்ததாக தெரிகிறது.. சம்பவத்தன்று புஷ்பாவை வழக்கம்போல் அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.. வழக்கம்போல், ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.. அப்போது, “நீ என்னைவிட்டு வேற யாரையுமே கல்யாணம் செய்யக்கூடாது” என்று புஷ்பா குடிபோதையில் சொல்லி கொண்டே இருந்தாராம்.. இதனால், ஆத்திரம் அடைந்த யோபு, புஷ்பாவை கடுமையாக தாக்கியுள்ளார்..

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.. இதை பார்த்து பதறிப்போன யோபு, இறந்த புஷ்பாவை தூக்கில் மாட்டிவிட்டு தப்பி சென்றிருக்கிறார்.. இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, யோபு கைதாகி உள்ளார்.. போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த யோகி, திருவள்ளூர் மணவாளநகர் போலீசில் தானாகவே சரணடைந்தார். எனினும், இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் யோபுவை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

Related Posts

உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. சாம்சனை கழட்டி விட்ட ரோஹித் சர்மா ! அஸ்வினும் இல்லை !

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15

“மோடி சர்வாதிகாரி தான்” – மேடையில் பரபரப்பாக பேசிய அண்ணாமலை”

மோடி சர்வாதிகாரிதான் அவர் ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“அய்யா சாமி ஆளவிடுங்க” .. கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன அமைச்சர் துரைமுருகன்!

வேலூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “யப்பா சாமி..

Latest News

Big Stories