சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது நடிகர் அஜித் படம் ஓட்டப்பட்டிருந்த வாகனத்தில் பதிவு எண் எங்கே இருக்கிறது என தேடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட போலீசார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தன. அப்போது அரசின் விதிமுறைகளை மீறி பதிவெண்கள் ஒட்டப்பட்டு இருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.


அப்போது நடிகர் அஜித்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்த ஒரு வாகனத்தில் பதிவெண் எங்கு ஒட்டப்பட்டு இருக்கிறது என போலீசார் குழப்பத்துடன் தேடினர். வாகனத்தின் பக்கவாட்டில் பதிவெண் இருந்ததை கண்ட போலீசார். விதிமுறைகளை பின்பற்றாமல் பதிவெண் இருந்ததற்காக வாகன ஓட்டிக்கு எச்சரிக்கை விடுத்த அனுப்பினார்.
