மனைவிக்கு ஆண்குறி உள்ளது இது பெண்ணே கிடையாது என்று கணவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் ஒருவர் என்னுடைய மனைவி பெண்ணே கிடையாது, அவளுக்கு ஆண்குறி இருக்கிறது அவள் ஒரு ஆண் தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்கள் எனக்கு நீதி வேண்டும். என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் உடைய பின்னணி என்ன என ஆராயத் தொடங்கினர்.
அந்தக் கணவர் அவர் மனைவிக்கு ஆண்குறி பெண்குறி இரண்டுமே உள்ளது பெண்குறி அடைத்து உள்ளது என மருத்துவர் கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தார். ஆனால் பெண்குறி கருவளையத்தின் குறைபாடு இருப்பது ஒரு பிறவிக் கோளாறு ஆகும். இதில் திறப்பு இல்லாத கருவளையம் யோனியை முழுமையாக தடுக்கிறது. அந்தக் கணவர் உடைய வழக்கறிஞர் இது ஒரு கிரிமினல் குற்றமாகும் என பிரிவு 420இல் இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறார்.
அவருடைய மனைவி உண்மையிலேயே ஒரு ஆண். ஆணை பெண் என ஏமாற்றி இவரை திருமணம் செய்து வைத்துள்ளனர் எனவே இது ஒரு பெரிய குற்றமாகும் என்று வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால் மருத்துவ கூற்றுகள் படி அவருக்கு கர்ப்பப்பைகள் பெண்ணுக்கு உள்ளது போலவே தான் இருக்கிறது என்றும் பெண்குறி அடைப்பை மட்டும் வைத்து அவரை ஒரு பெண் இல்லை என்று சொல்வதற்கு இங்கு இடமே இல்லை என கோர்ட் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் அவருக்கு ஆண்குறி இருக்கிறது, ஆண்குறி உள்ள ஒரு நபர் எப்படி பெண்ணாக முடியும் இதற்கு பதில் அளியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மத்தியபிரதேச காவல்துறைக்கு 6 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அந்த பெண் மற்றும் அவரது தந்தை பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.