கோவில்பட்டி அருகே ஆசிரியர் மாணவரை அடித்ததால் மாணவரின் உறவினர்கள் சேர்ந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே எட்டயபுரம் கீழ் நம்பிபுறம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி, செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு பிரகதீஷ் என்று ஏழு வயது மகன் உள்ளார். இவர் தனது தாத்தாவுடன் கீழ் நம்பி புரத்தில் வசித்து வருகிறார். அங்கு உள்ள ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு அவர் படித்து வருகிறார்.
அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் மற்றும் தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் பிரகதீஷ் கீழே விழுந்ததாக தெரிகிறது. அதனால் மெதுவாக விளையாடும் படி ஆசிரியர்கள் சத்தம் போட்டனர். ஆனால் மாணவர் பிரகதீஷ் வீட்டுக்கு சென்று இதனை வேறு விதமாக கூறியிருக்கிறார் என கூறப்படுகிறது. பாரத் ஆசிரியர் தன்னை அடித்ததாக தாத்தாவிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100க்கு அழைத்து இது குறித்து புகார் அளித்துள்ளார். அதை அடுத்து போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்திய போது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என பள்ளி திறப்பில் சொல்லப்படுகிறது. இதனால் நேற்று மதியம் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் மற்றும் அவரது மனைவி செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி நீங்கள் பையன் மீது கை வைக்கலாம் என ஆசிரியரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.
மேலும் ஒரு படி போய் காலணியை எடுத்து ஆசிரியர் பாரத்தை அடித்துள்ளனர். இதை தடுக்க வந்த தலைமை ஆசிரியரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து சம்பவம் கேள்விப்பட்டதும் எட்டயபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம் செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கும் பெற்றோர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்
— DON Updates (@DonUpdates_in) March 21, 2023
இரண்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் பாரத் அடித்ததாக கூறி பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பெற்றோர் கைது செய்யப்படனர் pic.twitter.com/Lt0MGpLwWR