கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்டங்கள் இருந்தது. அவற்றில் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக்கொலை போன்றவை அனைவரும் அறிந்ததே, இவற்றை நாம் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால் முற்றிலுமாக மறைக்கப்பட்ட பாட புத்தகங்களில் கூட சொல்லப்படாத மிகவும் கொடூரமான சட்டங்களும் அன்று இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா ?
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சாதி கொடுமை தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் மார்பக வரி சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் அமலில் இருந்தது. அதாவது ஒரு சில உயர் குடியை சேர்ந்த பெண்களைத் தவிர மற்ற இனத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் தமது மார்பில் அளவிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். மார்பை மறைக்கா விட்டால் வரி செலுத்த தேவையில்லை.

மேலும் விவசாயிகள் பயிர்களுக்கு நிலத்திற்கும் வரி செலுத்துவதை தவிர மீசை வளர்க்கவும் அணிகலன்கள் அணியவும் தனியாக வரி செலுத்த வேண்டும். குறிப்பாக கேரளா நாகர்கோயில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இச்சட்டம் கடுமையாக அமலில் இருந்தது. அப்போது கேரள அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக நாஞ்சலி என்ற ஈழவா இனத்தை சேர்ந்த பெண் போராடினால். அதனால் 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நாஞ்சலிக்கு திருவாங்கூர் அரசு இரட்டை வரி செலுத்த வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்தது.
அதனால் ஆத்திரப்பட்ட நாஞ்சலி வரி செலுத்த மறுத்து விட்டாள். ஆனாலும் விடாமல் அவளிடம் கேட்டு வற்புறுத்தி வந்தது அரசு. ஒரு நாள் வரி வசூலிப்பவர்கள் வீடு வரை வந்து நாஞ்சலியிடம் வரி கேட்டபோது கொஞ்சம் பொறுங்கள் எடுத்து வருகிறேன் என்று வீட்டிற்குள் சென்ற நாஞ்செலி, ஒரு கத்தியுடன் வெளியே வந்தாள் வாழை இலையை நிலத்தில் பரப்பி தமது கையிலிருந்த கத்தியால் மார்புகள் இரண்டையும் இழுத்து இலையில் வைத்தால் நாஞ்சலி.
அந்த கொடுமையான காட்சியை நேரில் பார்த்தவர்கள் ஆடிப் போனார்களாம். இது இருந்தால்தானே வரி கேட்பாய் நீயே எடுத்துக்கோ என்று சொல்லி விட்டு நாஞ்சலி தரையில் விழுந்து இறந்து போனால். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன திருவாங்கூர் அரசு உடனடியாக இச்சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1803 சுமார் 200 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த சம்பவம் நடந்த இடம் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலா கிராமம் அருகே முளைத்து பரம்பு என்னும் இடம்.
பிறகு இந்த இடத்திற்கு “மனோரமா காவலா” என்று பெயர் மாற்றி விட்டனர். அந்த ஊர் மக்கள் இன்னும் நாஞ்சலியை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் நாஞ்சலிக்கு எந்த நினைவு சின்னமும் கிடையாது. நாமும்தான் எத்தனையோ மகளிர் தினத்தை கொண்டாடி விட்டோம், ஆனால் நம்மில் எத்தனை நபர்களுக்கு நாஞ்சலியை தெரியும் ? தன் கணவருக்காக மதுரையை எரித்த கண்ணகி நினைவில் வைத்துள்ள நாம் பெண்களின் உரிமைக்காக போராடி தன் உயிரைவிட்ட நாஞ்சலியின் வரலாற்றை மறந்து விட்டது ஏனோ.
