திரைப்பட துறையில் உள்ள பட்டியல் இனத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நடிகை மீரா மித்துனுக்கும் எதிராகவும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் என்பவர் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் ஜாமீனில் விடுதலை ஆயிருக்கின்றனர். இந்த வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசரானார் நடந்தது. இன்றைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை தொடங்கியது வழக்கின் சாட்சிகள் அவருடைய நண்பர் சாம் அபிஷேகம் அவரது வழக்கறிஞர் ஆஜராகி இருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

இதையடுத்து சாட்சி விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டும் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நீதிமன்றத்தை ஏமாற்றும் வேலை என்று தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுன் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே இதே போல தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் அதற்கு எதிராக கடந்த மார்ச் 23 ஆம் தேதி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
