இன்னும் முதுகில் நிறைய இடம் இருக்கிறது யார் வேண்டுமானாலும் குத்திக் கொள்ளுங்கள் என மனமுடைந்து பேசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை அவர்கள் “ஜாதியை வைத்து மதத்தை வைத்து அரசியல் செய்யவது திமுகவை தான் சேரும் என கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயமாக உள்ளது. அதற்கு அண்ணாமலை எதுவும் செய்ய முடியாது. துணை நடிகர்கள் எப்படி பெரிய நடிகர்களை நல்லவர்கள் திறமைசாலிகள் என கூறுவார்களோ, அதுபோலதான் இது உள்ளது. மேடையில் நான்கு நடிகர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வல்லவர் நல்லவர் என்று பேசுவதால் பாஜக ஒருபோதும் அவரைப் பார்த்து பயப்படாது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து ஸ்டாலின் தான் நல்லவர் என பேச வைத்தால் அதைப் பார்த்து பாஜக ஒருபோதும் பயப்படாது. பொதுமக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனக்கு பயமோ அல்லது யாரிடம் காலில் விழுவதோ பழக்கம் இல்லை. இன்னுமும் எனக்கு முதுகில் நிறைய இடம் உண்டு குத்துங்கள் என்னைப் போன்று தாக்கப்பட்ட தலைவன் தமிழக சரித்திரத்திலேயே கிடையாது” என உருக்கமாக பேசி உள்ளார் அண்ணாமலை.
