கேமரா மைக் ஆஃப் செய்து இருக்கிறது என நினைத்துக் கொண்டு “ஒரு பெண்மணியை அண்ணன் தம்பி இரண்டு பேர் கரூரில் வைத்திருக்கிறார்கள்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இதை தற்போது தனது ட்விட்டரில் பதிவிட்டு காயத்ரி ரகுராம் கூறியதாவது :- மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். Passing judgmental words. இதில் பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு சிலர் அடுத்தவரின் படுக்கை அறையை நோட்டமிடுவது தவறான செயல் இப்படித்தான் உங்களின் அரசியல் அறம் இருக்குமா என அண்ணாமலையை விமர்சித்தும் வருகின்றனர் தற்போது இவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்ன தெளிவாக தெரியவில்லை ஆனால் கரூர் என்று அந்த வீடியோவில் பேசியிருப்பதால் சமீபத்தில் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரைட் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது அதனால் ஒரு சிலர் இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் குறி வைத்து பேசுகிறாரா எனவும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்..
மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். Passing judgmental words. இதில் பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்.… pic.twitter.com/PTVfk9qeUX
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) June 2, 2023