வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை கன்னம் பழுக்க அடித்ததால் போலீஸ் ஸ்டேஷனில் புகார்.
பரதேசி படம் எடுத்த போது நடிகர் நடிகைகளை கம்பால் வெழுத்தெடுத்து சர்ச்சைக்குள்ளானவர் இயக்குனர் பாலா. வணங்கான் படத்துக்காக சூர்யாவை கிலோமீட்டர் கணக்கில் ஓட வைத்து கொடுமைப்படுத்தியதும். இனிமேல் பாலா இயக்கத்தில் படமே வேண்டாம் என்று ஓடும் நிலைக்க தள்ளப்பட்டார் சூர்யா. இந்த நிலையில் அருண் விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் என்ற பெயரில் பாலா தனது படத்தை தொடர்ந்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வரும் நிலையில் இதில் நடித்த மலையாள நடிகை லிண்டா கன்னம் வீங்கிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். வழக்கம் போல பாலா வேலையை காட்டிவிட்டார் போல என்று நினைத்து அவரிடம் விசாரித்த போது வேறு ஒரு தகவல் வெளியே வந்தது. வணங்கான் படத்தில் நடிப்பதற்காக தான் உட்பட சில நடிகைகள் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் தங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அழைத்து வந்த துணை நடிகர் ஒருங்கிணைப்பாளர் ஜித்தின் என்பவர் கொஞ்சமாக பணம் கொடுத்ததாகவும் மீதமுள்ள 24 ஆயிரம் ரூபாயை கேட்டபோது அவர் தன்னை கன்னத்தில் அறைந்து தாக்கியதாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் இது குறித்து காவல்துறையிலும் லிண்டா புகார் அளித்துள்ளார் நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வரும் நிலையில் லிண்டா உள்ளிட்ட துணை நடிகைகள் படப்பிடிப்பில் ஒத்துழைக்காமல் பாதியில் சென்று விட்டதாக கூறி ஜித்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
