விஜயின் 68 ஆவது படம் முழுமையாக அரசியல் டயலாக் மற்றும் அரசியல் காட்சிகள் நிறைந்த படமாக இருக்க வேண்டும் என இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் விஜய் நடித்துவரும் நிலையில் அவரின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் டயலாக் நிறைந்ததாக படத்தை உருவாக்க வேண்டும் என விஜய் வெங்கட் பிரபுவிடம் கூறியதாக தகவல் பரவி வருகிறது.
