கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் சிபிகாட் தொழிற்பேட்டை அமைத்து விலை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து 150 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தொழிற்துறை அமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுருத்தியுள்ளார்.

நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு அளிப்பதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில் அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி அன்னையா உடல் நலம் குன்றி உயிர் இழந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
