“ஸ்டாலின் நம்பர் 1 முதல்வர் அல்ல ; அவர் இந்த நூற்றாண்டின் நம்பர் 1 ஜோக்கர்” – அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சை பேச்சு

எல்லோரும் ஸ்டாலினை நம்பர் ஒன் முதல்வர் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவன் நம்பர் ஒன் ஜோக்கர் என்று பத்திரிகையாளர்கள் முன் ஆவேசமாக பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர் ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் 20ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் சில நில மோசடி ஆகிய வழக்குகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு ஜெயக்குமாருக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதில் திருச்சியில் தங்கியிரந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

இதன்படி அந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த அமைச்சர் ஜெயக்குமார் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் :-

திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை சீண்டிப் பார்க்கிறது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் குறி வைப்பது மட்டுமே திமுகவில் ஒரே இலக்காக இருக்கிறது. அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்கினை போட்டு பணம், நகை ஏதும் கூட கைப்பற்றாமல் அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது மிகப்பெரிய பொய் என குற்றம் சாட்டியுள்ளார்.

“நீட் தேர்வு கட்டாயமாக நடைபெறும், பொய் பேசி ட்ராமா நடத்துகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை அதிரடி

மேலும் ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக திமுக ஆர் எஸ் பாரதி குறிப்பிட்டதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் அது மட்டும்தான் நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர பேட்டி கொடுக்கக் கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை அதனால் நான் பேட்டி கொடுப்பேன் என் வாயை மூடமுடியாது அதேபோல் ஒன்றரை கோடி தொண்டர்கள் என் வாயை மூடமுடியாது.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்தான் என கூறுகிறார்கள், ஆனால் உண்மையிலேயே அவர் இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்கர் என்று ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார் மேலும் பேசிய அவர் திமுகவை கௌரவர்கள் ஆட்சி என்றும் அதிமுக பாண்டவர்கள் ஆட்சி என்றும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி என்றார்.

Spread the love

Related Posts

“ஆறுக்குட்டி போல இனி எந்த குட்டிகளும் எங்களிடமிருந்து செல்லாது” – EPS திட்டவட்டம்

மேலும் அவர் பல விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவபதி

Viral Video | கணவர் பும்ரா மும்பை அணிக்கு விளையாடினாலும் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு சப்போர்ட் செய்யும் பும்ரா மனைவி | காரணம் என்ன ?

இன்று ஐபில் போட்டியில் பும்ராவின் மனைவியான சஞ்சன கனேசன் மும்பை மற்றும் கொல்கத்தா ஆடும் ஆட்டத்தில்

“பிட்டு படத்துல நடி, பேமஸ் ஆயிடுவ” என்று கொச்சையான வார்த்தைகளில் பதிவிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த வி.ஜே பார்வதி

பிரபல தொகுப்பாளினி ஆன வி ஜே பார்வதியின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்சனில் ஒருவர் “நீ ஒரே