ஹிஜாப் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட கூடாது. பள்ளி வளாகம் வரை அதை அணிந்து வரலாம் அதற்க்கு மேல் அதை கழட்டி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் வார்டு 110ல் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசேகர் அவர்களை ஆதரிக்க வைகுண்டபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் குஷ்பூ.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எல்லருக்கும் சகஜம் அதனால் அதை நாங்கள் பொருட்படுத்தாமல் பாஜகவின் பலத்தை மட்டுமே நம்பி காலம் காணுகிறோம்” என்றார்.
அந்த நேரத்தில் ஹிஜாப் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் குஷ்பூவிடம் கேட்டபோது அதற்க்கு அவர்
“கல்வி நிலையத்திற்குள் காவி துண்டு நீல துண்டு எதுவுமே அணியக்கூடாது. ஹிஜாப் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட கூடாது. பள்ளி வளாகம் வரை அதை அணிந்து வரலாம் அதற்க்கு மேல் அதை கழட்டி வைக்க வேண்டும். நானும் ஒரு இஸ்லாமிய பெண் தான் ஆனால் நான் ஹிஜாப் கழட்டி விட்டு தான் கல்வி நிலையங்களுக்கு செல்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.