பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது பற்றின கூடுதல் விவரத்தை தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
நாளை வெளியாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த முறை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

அதாவது ஜூன் 20ஆம் தேதி அன்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும், பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் நடந்தது. இந்த தேர்வினை சுமார் 30 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் எழுதினார்கள்.
தற்போது ஜூன் 20ஆம் தேதி திங்கட்கிழமை இந்த தேர்வுகளை http://www.dge.tn.gov.in வெப்சைட்டில் காணலாம். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம்வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.
