திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹிந்து கடவுளை வழிபடக்கூடாது கிறிஸ்தவ கடவுளை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியதாக 2 ஆசிரியைகள் மேல் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
திருப்பூரில் அவிநாசி பகுதி ராக்கியாபாளையதில் ஜெய்வாபாய் என்ற மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதுமே தலையில் திருநீறு வைத்துக்கொண்டு ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இதைக் கண்ட இரண்டு ஆசிரியைகளும் இவரை திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என்று கட்டாயப்படுத்தியதாகவும் மேலும் இந்து கடவுளின் பெயரை எழுதக்கூடாது என்பதாகவும் இவரை கட்டாயப்படுத்தி கிறித்துவ கடவுளை தான் வழிபட வேண்டும் என்று பணித்திருக்கின்றனர்.

இதனால் மனமுடைந்த மாணவி நான் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தந்தையிடம் கூறி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த தந்தை விஷயத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து தெரிவித்தார். அங்கு அவர் கூறுகையில் என்னுடைய மகளுக்கு திருநீறு ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது எனவும், இந்து கடவுளின் பெயரை எழுத கூடாது எனவும் காட்டாயப்படுத்துகின்றனர். கிறிஸ்தவ கடவுளின் பெயரை மட்டும் தான் உபயோகிக்க வேண்டும் என்று அதை திணிக்கின்றனர். இது என்னுடைய மத உணர்வை புண்படுவது போல் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். அதனால் என்னுடைய மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனவே இந்த இரண்டு ஆசிரியைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதன் பெயரில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி ஆய்வாளர் ரமேஷ்யிடம் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி கூறியுள்ளனர். மேலும் மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் என தனித்தனியே ஒவ்வொருவரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து இந்து முன்னணியினர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த இரண்டு ஆசிரியைகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மதமாற்ற தந்திரம் ஏதேனும் நிகழ்ந்து இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
மதம் மாற வலியுறுத்தி
— Hindu Munnani (@hindumunnaniorg) April 19, 2022
டார்ச்சர்.திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி பெற்றோரோடு காவல் நிலையத்தில் புகார். மதரீதியாக துன்புறுத்திய தோடு கிறிஸ்தவ மத போதனைகளை செய்யச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியை மீது புகார் https://t.co/sFIFDoq3d2