2022 முதல் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்தார். திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இது தான் முதல் முறை.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகளுக்கும், பல்வேறு பட்ஜெட் தாக்கல் அறிவித்தார். அதற்குண்டான பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சிறப்பம்சம் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரியாரின் எழுத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல 21 இந்திய மற்றும் உலக மொழிகளிலும் பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட 5 கோடி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ஒதுக்கீடு
பேரிடர் மேலாண்மை துறைக்கு 7,400 கோடி ஒதுக்கீடு
அணைகளில் புனரமைப்பு பணிக்கு 1,064 கோடி ஒதுக்கீடு
வானிலை மேம்பாடு பணிகளுக்கு 10 கோடி ஒதுக்கீடு
சென்னை, தாவரவியல் பூங்காவுக்கு 300 கோடி ஒதுக்கீடு
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு
முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 125 கோடி ஒதுக்கீடு
புதிய நூலகங்கள் தொடங்கிட 125 கோடி ஒதுக்கீடு
இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு
காவல் துறை தொடர்பான திட்டங்களுக்கும் 10,285 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .
அரசுப்பள்ளியில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் க.அன்பழகன் கல்வி மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்காக 162 கோடி ஒதுக்கீடு.
“தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல்” என்ற புதிய திட்டத்திற்கு 25 கோடி ஒதுக்கீடு
வடசென்னையில் நவீன விளையாட்டு வளாகங்கள் தொடங்கப்படுவதற்கு 10 கோடி ஒதுக்கீடு
சென்னையைப் போல அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை தொடங்கிட 5.6 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுக்கு 1,547 கோடி
மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்வதற்கு மானியமாக 1,520 கோடி மதிப்பில்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ஒதுக்கீடு
கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலை அமைக்க 135 கோடி ஒதுக்கீடு
500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப் போவதாக திட்டம்
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு
நகை கடன் தள்ளுபடி 1000 கோடி ஒதுக்கீடு
மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடிக்கு 500 கோடி ஒதுக்கீடு
மருத்துவத் துறைக்கு 17.901.23 கோடி ஒதுக்கீடு.
இந்து சமய அறநிலையத் துறைக்கு 340.87 கோடி ஒதுக்கீடு.
இடிந்த கோயில்களை புதிதாக ஆக்க 100 கோடி ஒதுக்கீடு
தர்காக்கள் மற்றும் தேவலையங்கள் புனரமைக்க 12 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பிற்காக 450 கோடி ஒதுக்கீடு
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 838.01 கோடி ஒதுக்கீடு.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடியும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு.
காயமுற்று கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிக்கக் மாவட்டம் தோறும் வள்ளலார் காப்பகங்கள் அமைக்க 20 கோடி ஒதுக்கீடு.
இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவோம் என்று சொல்லி இருந்த அந்த திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் குடும்பத் தலைவிகள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.