சென்னையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது போதையில் மூன்று நபர்கள் தோள் மீது கைபோட்டு எரிச்சலூட்டும் வகையில் அவரை சீண்டி உள்ளனர், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் இவர்களை ஒப்படைத்தார்.
சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணிபுரிகிறார் இவர் சீருடை அணியாமல் மப்டியில் ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்து மோர் குடிக்கும்போது 3 போதை இளைஞர்கள் அவரின் தோள் மீது கையை போட்டு “உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு நீ யாரு” என்று கேட்டு, பொது இடத்தில் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அந்த போலீஸ் பெண்மணி “நான் சப்-இன்ஸ்பெக்டர் என் மேல இருந்து கையை எடு” என்று முறையாக கூறியும் அவர்கள் போதையில் இருந்ததால் மீண்டும் மீண்டும் “நீ யாரு நீ யாரு” என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த சம்பவத்தை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களின் உதவியுடன் நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து அவரை அங்கு ஒப்படைத்தார். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
