அரசு பணியில் இருப்போர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர், பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயர் பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
