ப்ளூ சட்டை என்று அழைக்கப்படும் ப்ளூ சட்டை இளமாறன் அவர்கள், தனது யூடியூப் சேனலில் ரிவ்யூ போடுவதன் மூலம் தமிழ்மக்களிடம் சற்று பிரபலமானார் இவரின் ரிவ்யூ வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவர் எல்லா படத்தையும் வசை பாடும் விதமாக படத்தில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறைகளை மட்டுமே கூறி பிரபலமடைந்தார். நம் தமிழ் ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய ராட்சசன் தீரன் போன்ற படங்களை கூட அவர் கழுவி ஊற்றி இருப்பார்…
அந்த அளவிற்கு சினிமா படங்களை மட்டம் தட்டி ரிவ்யூ போடுவதால் அவரை சிலர் ரசிகர்களுக்கு பிடிக்காது. முக்கியமாக விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அவரை கலாய்த்து சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்களை போடுவார்கள். இதனால் ஆத்திரமடையும் ப்ளூ சட்டை மாறன் அவ்வப்போது இந்த ரசிகர்களை எல்லாம் வம்பு இழுக்கும் விதமாக சில மீம்ஸ் அவரும் போடுவார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை இவர் மிகவும் கடுமையாக விமர்சித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார். அதில் நடிகர் அஜித் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு. இவர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார், தன்னுடைய படங்களையும் விளம்பரப்படுத்த மாட்டார், எந்த ஒரு நேர்காணலும் கொடுக்கமாட்டார், விருது விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார், ஆனால் 365 நாட்களும் இவருடைய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும். ஆனால் அந்த போட்டோக்கள் எடுப்பது யாரென்று அவருக்கே தெரியாது அவரின் அனுமதி இல்லாமல் தான் இந்த போட்டோ எடுக்கப்படுகிறது நம்புங்க நம்புங்க என்று அஜித்தை கலாய்க்கும் விதமாக இந்த ட்வீட்டை அவர் போட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் பலரும் அவரை கமெண்ட் செக்ஷனில் திட்டி வருகின்றனர். உனக்கெல்லாம் இந்த பொழப்பு தேவையா நீயே மத்தவங்கள விமர்சனம் செஞ்சு காசு சம்பாதிக்கிற அப்படி என்று மிகவும் மோசமான விமர்சனங்களை புது சட்டை மாறன் தற்போது அஜித் ரசிகர்களிடமிருந்து பெற்று வருகிறார்.மேலும் இந்த விஷயத்தில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.