மகாராஷ்டிராவில் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் இந்திய உடும்பை பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேரை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த உலகில் பாட்டியையும், ஸ்கூல் & காலேஜ் பெண்களையும், ஏன் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வுகளை நாம் செய்திகளில் கண்டிருப்போம். ஆனால் தற்போது நாம் கேட்டிராத. அறிந்திராத ஒரு வகையிலான பாலியல் பலாத்காரம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவில் சஹ்யாத்ரி புலிகள் காப்பகத்தில் நுழைந்த நான்கு பேர் அங்கிருந்த பங்காள மானிட்டர் பல்லியை கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிசிடிவி காட்சியை பார்த்ததில் இவர்கள் அந்த மானிட்டர் பல்லியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்களின் கையில் இருந்த செல்போன்களை சோதனை செய்ததில் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் வனத்துறை அதிகாரிகள் அந்த வீடியோக்களை எல்லாம் ஆராய்ந்து சந்தேகத்தின் பெயரில் சந்தீப் துக்ராம், அக்ஷய் சுனில், ஜனார்தன் காம்டேகர் மற்றும் பவார் மங்கேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த வீடியோவில் அந்த மானிட்டர் பல்லியை வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளதால், இதன் காரணமாக அந்த நான்கு பேர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்திருக்கிறது.