திமுக ஆட்சியில் காப்பி மிக்சருக்கு மட்டும் 47 கோடி ரூபாய் செலவானது என ஒரு நியூஸ் பேப்பர் ஆர்டிகள் நேற்று சமூக வலைதளம் எங்கும் வேகமாக பரவியது. உண்மையிலேயே இது திமுக ஆட்சியில் நடந்தது தான ?என இதுபற்றிய விவகாரமான விஷயங்களை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
இரண்டு தினங்களாக நீர்வள நிலவள திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காப்பி மிச்சர் செலவு மட்டும் நாற்பத்தி ஏழு கோடி என உலக வங்கிக்கு கணக்கு காட்டியுள்ளது தமிழக அரசு. இந்த அறிக்கையை கண்டு உலக வங்கி ஆடிப்போனது. என ஒரு நியூஸ் பேப்பர் துண்டு இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து விவரித்து பார்க்கையில் இது உண்மையிலேயே நடந்த ஆண்டு 2017, தேதி ஜூன் 12 அந்த நேரத்தில் அதிமுக ஆட்சிதான் மாநிலத்திலிருந்தது. அதிமுக ஆட்சியில் வந்த இந்த அறிக்கையை திமுக ஆட்சியில் நடந்தது போல சில பாஜக தொண்டர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். தற்போது இந்த உண்மையை கண்டறிந்து இது அதிமுக ஆட்சியில் நடந்தது திமுக ஆட்சியில் நடக்கவில்லை என திமுக ஆதரவாளர்கள் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறி வருகின்றனர்.
