உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாஜக :-
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளி வர உள்ளது. இந்நிலையில் இன்று பகல் 12 மணி நிலவரப்படி 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற 4 இல் பாஜக முன்னிலை வகிக்கிறது.
12 மணி நிலவரப்படி:-
உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் 261 இடத்தில் பாஜக முன்னிலை
உத்தரகண்டில் 70 தொகுதிகளில் 46 இடங்களில் பாஜக முன்னிலை
மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளில் 26 இடத்தில் பாஜக முன்னிலை
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளில் 20ல் பாஜக முன்னிலை
மீதமுள்ள பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் 89 இடத்தில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.