இன்று வரை விடைதெரியாத 5 மர்மமான புகைப்படங்கள்

ஓவ்வொரு நாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் மக்களால் எடுக்கப்படுகிறது. அதில் ஒரு சில புகைப்படங்களில் மர்மமான விஷயங்கள் எதிர்பாராமல் பதிவாவது இயல்புதான். அவ்வாறு பதிவாகி இன்றுவரை விளக்க முடியாத சில உண்மை புகைப் படங்களைப் பற்றித்தான் இந்தக் பதிவில் பார்க்க போகிறோம்.

Mysterious Foot

2014ஆம் ஆண்டு மார்ட்டின் என்பவர் அவரது நான்கு வயது குழந்தையுடன் ஜப்பானில் உள்ள கடற்கரைக்கு சென்று சில புகைப்படங்கள் எடுத்துள்ளார். பிறகு அன்று இரவு வீட்டிற்கு வந்து அந்த புகைப்படங்களை கணினியில் பதிவேற்றி ஒவ்வொன்றாக பார்த்துள்ளார். அப்போது ஒரு புகைப்படத்தில் மட்டும் குழந்தைக்கு பின்னால் யாரோ நிற்பது போல கருப்பு நிற கால்கள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால் அவர் அந்த புகைப்படம் எடுத்தபோது அப்பகுதியில் ஒருவர் கூட இல்லை மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சில மணி நேரத்திற்குள் வைரலாகியுள்ளது. சிலர் இது போலியான எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று குற்றம் சாட்டினார்கள். புகைப்படத்தை ஆராய்ந்த வல்லுநர்கள் இது உண்மையான புகைப்படம் என்பதை உறுதி செய்து உள்ளனர். எனவே இந்த புகைப்படத்தில் இருப்பது என்ன என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

Old Truck Photo

கலிபோர்னியாவில் காவல் துறை பணியாளர் ஒருவருக்கு புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே ஒருநாள் காடுகளுக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பழைய லாரிகளை புகைப்படங்கள் எடுத்துள்ளார். பிறகு வீட்டிற்கு வந்து அந்த புகைப்படங்களை உன்னிப்பாக பார்த்தபோதுதான் ஒரு புகைப்படத்தில் மட்டும் வித்தியாசமான உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக லாரியின் இடதுபுர ஓரத்தில் இருக்கும் ஒரு உருவம். அந்த உருவமானது ஒரு பெண்ணின் முகம் போல இருந்துள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தை எடுத்த போது அங்கு யாரும் இல்லை என உறுதியாகக் கூறுகிறார்.

அவர் காவல்துறையில் பணியாற்றுபவர் என்பதால் அங்குள்ள புலனாய்வு வல்லுனர்களிடம் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ய கொடுத்துள்ளார். ஆய்வு செய்தவர்கள் இது உண்மையான புகைப்படம் என்பதை உறுதி செய்ததுடன். அதில் தெரிவது பெண்ணின் உருவம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். எனவே இந்த புகைப்படமும் விளக்க முடியாத மர்மங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

Real Annabelle

2014 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னப்ல் ஆங்கில திகில் திரைப்படத்தை பலரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த திரைப்படமானது உண்மையான ஒரு திகில் பொம்மையின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என உங்களுக்கு தெரியுமா ? அதாவது 1970ஆம் ஆண்டு டோனா என்ற தன்னுடைய மகளின் பிறந்தநாள் பரிசாக அவரது அம்மா வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு தான் இந்த பொம்மை. இந்த பொம்மையை வீட்டிற்கு கொண்டு வந்த சில நாட்களிலேயே தானாக நகர ஆரம்பித்தது.

இரவில் சிவப்பு நிறத்தில் ஒளிருவதாகவும், குழந்தைகளின் கனவில் தோன்றி பயமுறுத்தும் விதைகளையும் செய்துள்ளதாம். அதுமட்டுமின்றி இந்த பொம்மையை ஏதாவது ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டால் சில மணி நேரத்தில் வேறு ஒரு அறையில் தென்படும். இவ்வாறு பல அமானுஷ்ய நிகழ்வுகள் இந்த பொம்மையை மூலமாக நடந்துள்ளது. இதனால் இந்த பொம்மையை அங்குள்ள அருங்காட்சியகத்தில் எச்சரிக்கையுடன் கூடிய அறையில் வைத்து நிரந்தரமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள. இந்த பொம்மை ஏன் இப்படி நடந்து கொண்டது என்பதற்கு யாரிடமும் முறையான விளக்கம் இல்லை.

OLYMPUS DIGITAL CAMERA

Cooper Family Photo

இந்த புகைப்படம் 1949ஆம் ஆண்டு என்று குடும்பத்தினர் புதிதாக வாங்கிய வீட்டில் இருந்தபோது எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் எடுக்கும்போது இரண்டு குழந்தைகளும் குழந்தையின் அம்மா மற்றும் பாட்டி மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் நான்கு பேருடன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தாய் அவரகள் பார்த்த போது புகை மாதிரியான, ஐந்தாவதாக மனித உருவம் ஒன்று பதிவாகியிருந்தாம்.

இந்த புகைப்படம் இருபதாம் நூற்றாண்டு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டு இணையத்தில் வெளியான பின்பு பல ஆண்டுகள் பழமையான இந்த புகைப்படத்தில் இருப்பது இதற்கு முன்னால் இந்த வீட்டில் வசித்து இறந்தவரின் ஆன்மா என்று ஒரு வதந்தியும் நிலவிவருகிறது. இருப்பினும் இது தான் 100% உண்மை என்று நிரூபிக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது என்னவென்று புகைப்பட வல்லுனர் கூட இன்னும் கண்டறிய முடியவில்லை.

Mystery Child Hand

இந்த புகைப்படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு அழகான குடும்ப புகைப்படம் போல தான் தெரியும். ஆனால் உற்று கவனித்தால் புகைப்படத்தில் உள்ள கடைசி குழந்தையின் மீது கூடுதலாக ஒரு சிறிய கை இருப்பது தெளிவாகத் தெரியும். குடும்பத்திலுள்ள ஒருவருடைய கையாக இது இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இல்லை.

ஏனென்றால் மற்ற நான்கு பேருடைய கைகளும் முழுமையாக புகைப்படத்தில் பார்க்க முடிகிறது மேலும் இந்த புகைப்படம் எடுக்கும்போது வேறு எந்த குழந்தையும் பின்னால் இல்லை. இந்த புகைப்படமும் விளக்கமுடியாத ஒரு மர்மாகவே இருக்கிறது.

Spread the love

Related Posts

“இந்தியா இந்துக்களின் நாடு தான்” ஆ ராசாவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் பிரேமலதா

இந்துக்களைப் பற்றி தவறான முறையில் பேசிய ராசாவை ஓங்கி அடிப்பது போல இந்தியா இந்து நாடு

AK 61 படத்தின் கேட்டபுடன் சென்னை ஏர்போர்டிற்கு வந்த தல அஜித் | இணைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Ak 61 படத்தின் கேட்டப் உடன் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளிவந்த தல அஜித்தின் ரீசன்ட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேல் நீதிமன்ற வழக்கு ? | ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பு | என்ன விஷயம் ?

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான