கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவை வாட்டி வதைத்தது. எங்கு பார்த்தாலும் மாஸ்க்குகள் இல்லாத முகமே தென்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கொரானாவின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக அந்த தாக்கம் சற்று குறைந்தது என்று நினைக்கும் போது மருத்துவர்கள் நான்காம் அலை வரும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். அவர்கள் சொன்னது போலவே கடந்த 4 நாட்களாக இந்தியாவில் கொரோன தாக்கம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மீண்டும் பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.

இதற்கு முன்பு கொரோனா தணிந்து இருப்பதால் மாஸ்க்கை போட வேண்டியது கட்டாயம் அல்ல இதனால் அபராதமும் விதிக்கப்படாது என்று கூறியிருந்தனர். தற்போது அதன் தாக்கம் அதிகம் உள்ளதால் மாஸ்க் போடுவது கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தமிழக அரசு மீண்டும் 500 ரூபாய் அபராதம் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவித்துள்ளோம் என்றார். மேலும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
