ஐம்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்பில் மகேஷ்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 10 11 12 ஆகிய பொது தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறையினரால். தகவல்கள் வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்ததால் கற்றல் இடைவேளை கொஞ்சம் அதிகமானது. இதனால் பொது தேர்வை பார்த்து மாணவர்கள் பயப்படுகிறார்களா என்ற ஒரு காரணம் முன் வைக்கப்பட்டது. அந்த வகையில் தான் கடந்த ஆண்டு ஆறு லட்சம் பேர் பொது தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வு துறையினரால் புள்ளி விவரங்களோடு வெளியிடப்பட்டது. மேலும் இத்தனை லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பதை அறிந்ததும் மிகவும் அது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணம் என்ன என அமைச்சர் அன்பில் மகேஷ் ஆராய முற்பட்டார்.

அது ஒரு புறம் இருக்க இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போதும் 50000 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி தேர்வுகளை எழுத வரவில்லை. இதனால் தேர்வு எழுத மாணவர்கள் அச்சப்படுகிறார்கள் என்ற ஒரு கோணத்தில் இதனை பகுத்தறாயா முற்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மொழிபாடத்திற்கே இந்த அளவிற்கு அச்சம் என்றால் கணிதம் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் எத்தனை பேர் தேர்வில் பங்கேற்காமல் போவார்கள் என்று நினைக்கும் போது அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்சம் இருந்துள்ளதுது.
மேலும் இந்த தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அடுத்த வரும் பாடங்களுக்கான பொதுத்தேர்வில் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்த தேர்வை எழுதாத மாணவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனையும் வழங்கப்படும் என கூறிய அவர்கள் ஜூன் மாதம் இந்த தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் அன்பின் மகேஷ் கூறியுள்ளார்.
