இந்திய நாட்டுடைய பாதுகாப்பிற்கும் மற்றும் இறையாண்மைக்கு எதிராக உள்ள 54 சீன செயலிகளுக்கு தற்போது இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா மற்றும் சீன எல்லையில் தற்போது பரபரப்பு நிலவி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை உளவு பார்க்கும் விதமாக இங்கு செயலிகள் செயல்படுகிறது என்று கடந்த ஆண்டே பல செயலிகளை இந்தியா அழித்தது. தற்போது அதனை அடுத்து மீண்டும் ஒரு 54 செயலிகள் அச்சுறுத்தல் தரும் விதமாக உள்ளதால் அவற்றையும் தடை செய்துள்ளது இந்திய அரசு.
பியூட்டி கேமிரா, ஸ்வீட் செல்ஃபி எச்டி, விவா விடியோ எடிட்டர், ஆப் லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இந்தப் பட்டியலில் முக்கியபங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.