“6 மணி நேரம் கேடு தருகிறேன் முடிந்தால் என்னை தொட்டு பாருங்கள்” என்று திமுகவுக்கு சவால் விடுத்திருக்கிறார் அண்ணாமலை

என்னிடம் ஆடு மாடு தான் உள்ளது, 600 கோடி எல்லாம் இல்லை, ஆறு மணி நேரம் கெடு தருகிறேன் உங்களால் முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்று திமுகவுக்கு சவால் விட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் “என்னிடம் ஆடு மாடு தான் இருக்கு 600 கோடி இல்லை திமுக அவதூறு வழக்கு தொடுக்கும் அளவிற்கு நான் தகுதியானவன் இல்லை, நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் 6 மணி வரை பாஜக அலுவலகத்தில் தான் நான் இருப்பேன், தொட்டாம்பட்டியில் இருந்து வந்த எண்ணை தொட்டு பார்க்கட்டும்” என பதிலளித்துள்ளார்

நீதிமன்றத்தில் அவர்களின் வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு வந்து சேர்ந்தது. நான் அங்கேயே என்னுடைய வழக்கை சந்தித்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்து கொண்டு இருக்கிறேன் என்று ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தார். நான் இன்னும் ஆறு மணி நேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன் அவர்களிடம் உண்மையான ஆதாரம் இருக்கும் என்றால் என்னை கைது செய்யுங்கள். இப்போது மணி 12:15 இன்னும் ஆறு மணி நேரத்தில் அதாவது 6:15 மணி வரை நேரம் இருக்கிறது. முடிந்தால் முழு போலீஸ் படையுடன் வந்து என்னை கைது செய்து கொள்ளுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் “நான் யாரையும் மிரட்டி பணம் சம்பாதிப்பவன் இல்லை, நான் சுயமாக விவசாயம் செய்து உழைத்து தனி ஒருவனாய் நின்று கொண்டிருக்கிறேன், ஆர் எஸ் பாரதி போல் நான் கிடையாது. திமுக கட்சியில் தான் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என பாரம்பரிய நோக்கத்தோடு செயல்படுபவர்கள், நான் அப்படி கிடையாது, என் மீது அவதூறு வழக்குத் தொடர நோட்டீஸ் கொடுப்பதற்குக் கூட திமுகவிற்கு தகுதியே இல்லை” என சாடி இருக்கிறார்.

“குழந்தையை அடக்கம் செய்ய இடம் தராத இவர்கள் எல்லாம் கிறிஸ்டியன் என்று சொல்லி கொள்ள தகுதி இல்லாதவர்கள்” – பள்ளி வேன் மோதி உயிழந்த சிறுவனின் தாயார் ஆவேசம்

Spread the love

Related Posts

பிராமின் தட்டு இட்லி, பிராமின் காபி …. ஸ்விக்கி, ஸ்மட்டோ போன்ற ஆன்லைன் Food டெலிவரி கடைகளில் சாதி பெயர்… நெட்டிஸன்கள் கண்டனம்

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் food டெலிவரி செய்யும் செயலிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு

தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டை அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து விளம்பரப் பலகையை வைக்க வேண்டும் என்ற

நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளில் அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

நடிகை சில்க் ஸ்மிதாவின் 27 வது நினைவு நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் அவருடைய உருவப்படத்திற்கு