சென்னை காசிமேடு பகுதியில் தன்னுடன் படிக்கும் தோழியை 3 மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் ஒரு தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் ஒரு பெண் பிள்ளை அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தாயார் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டிற்கு அந்த மாணவியின் ஆண் நண்பர்கள் 3 பேர் வழக்கமாக இவரின் வீட்டில் தங்கி ஒன்றாக படிப்பது வழக்கம்.
அதேபோல ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத போது இவர்கள் நால்வரும் ஒன்றாக படித்திருக்கின்றனர். அப்போது அந்த மூன்று மாணவர்கள் வீட்டில் யாரும் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டின் கதவை மூடிவிட்டு அந்தப் பெண்ணின் ஆடையை கொஞ்சம்கொஞ்சமாக கழட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக யாரிடமாவது நீ கூறினால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர்.

அதனால் பயத்தில் இருந்த அந்த மாணவி இதை யாரிடமும் சொல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தன்னுடைய தாயுடன் கதறியபடி கூறியிருக்கிறார் அந்த மாணவி. இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த தாய் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் விசாரணையை தொடங்கி போலீசார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைந்திருக்கின்றனர்.
