KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

4000 கோடி பட்ஜெட்டில் ராமாயண திரைப்படம் – ஹாலிவுட் தரத்தில் இந்திய சினிமா

pallavi ramayanam today

4000 கோடி பட்ஜெட்டில் ராமாயண திரைப்படம் – ஹாலிவுட் தரத்தில் இந்திய சினிமா இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு முயற்சியாக ராமாயண திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் சர்வதேச தரத்துடன் உருவாகும் மாபெரும் படம். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ் மற்றும் அனுமனாக சன்னி டியோல் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த திரைப்படம், ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் நமித் மலோத்ரா அறிவித்திருப்பதுபோல், இந்த படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 4,000 கோடி. ஆரம்பத்தில் 1,600 கோடியாக இருந்த பட்ஜெட், அதிநவீன Visual Effects, செயற்கை நுண்ணறிவு டப்பிங், மற்றும் சர்வதேச தர இசை அமைப்புகள் போன்றவையால் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு AR ரஹ்மானுடன் கூடிய ஹாலிவுட் ஹான்ஸ் சிம்மர் இசை அமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். மேலும் Inception, Interstellar, Dune போன்ற படங்களில் கிராபிக்ஸ் செய்த DNEG நிறுவனம், இந்த படத்திற்கும் VFX வழங்குகிறது. IMAX தரத்திலும், Dolby Vision தொழில்நுட்பத்திலும் இந்த படம் உருவாகி வருகிறது.

சாய் பல்லவியின் தேர்வும் சம்பள விவாதமும் :

இதுகுறித்து சினிமா விமர்சகர் மனோஜ் kingwoodsnews தளத்திற்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறினார் இந்த திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, தென்னிந்திய ரசிகர்களுக்கே பரிச்சயமானவர். அவர் ஹிந்தி சினிமாவில் இது வரை அறிமுகமாகாத நிலையில், இப்படத்தில் அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர் 150 கோடி சம்பளத்துடன் நடிக்கிறார். நடிகைக்கு குறைவு நடிகருக்கு அதிக சம்பள வேறுபாடு குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது, சாய் பல்லவியின் நடிப்பு தேர்வு பெரும்பாலான ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

4000 கோடி பட்ஜெட்டில் ராமாயண திரைப்படம் – ஹாலிவுட் தரத்தில் இந்திய சினிமா

இந்த திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால், ராமாயண கதையை புராணம் அல்லது காவியம் என்று மட்டுமே பார்க்க முடியாது. அது இந்தியா முழுவதும் பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும், வாழ்வியல் வழிமுறைகளையும் வழிநடத்தி வந்தது. வால்மீகி ராமாயணம், துளசிதாஸ் எழுதிய ராம்சரிதமாநஸ் மற்றும் தண்டி ராமாயணம் என பல வடிவங்களில் இந்தக் கதை வெளிவந்துள்ளது. இதில், ஸ்ரீ ராமரின் தர்மத்தை பின்பற்றும் வாழ்க்கை, மாதா சீதையின் தூய்மை, ஹனுமான் போன்ற அடங்காத பக்தி உள்ளவர்கள் ஆகியோர் இந்த காவியத்தை ஆன்மீக-நாகரிக அடையாளமாக மாற்றியுள்ளனர். இன்று வரை, இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் ராமாயண வாசிப்பு, ராமலீலா நாடகம், மற்றும் ராம நவமி விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த படமோ, அந்த கலாசார நம்பிக்கையை உலகத் தரத்தில் உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியில், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஒவ்வொரு பாகத்திற்கும் சுமார் 300 நாட்கள் படப்பிடிப்பு மற்றும் 600 நாட்கள் பின்னணி வேலைகள் என மொத்தமாக மூன்று ஆண்டுகள் காலம் செலவிடப்படுகிறது.

இன்றைய சமூக வலைதளங்களில் ராமாயண திரைப்படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் நேரத்தில், #Ramayana போன்ற ஹேஷ்டாக்கள் டிரெண்டாகின்றன. சாய் பல்லவியின் பாரம்பரிய தோற்றமும், யாஷின் வில்லன் தோற்றமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வெறும் கற்பனையோ, புராண கதையோ அல்ல. இது இந்தியாவின் கலாசார அடையாளங்களின் மேம்படுத்தப்பட்ட ஓர் கலை வடிவம்.

உண்மையான ராமாயண வரலாறு – ஒரு பார்வை :

ராமாயணம், இந்தியாவின் பண்டைய கால இலக்கியங்களில் ஒன்றாகும். இது மகரிஷி வால்மீகி எழுதினார்கள். இது ஒரு காவியம் மட்டுமல்ல, ஆன்மிகம், தர்மம், நீதி மற்றும் குடும்ப உறவுகளின் பேரியல் வழிகாட்டும் நூலாகவும் பார்க்கப்படுகிறது.

ராமரின் பிறப்பும் வழிப்பயணமும் :

ராமர், அயோத்தி அரசர் தசரதனின் மூத்த மகன். இவர் பிறந்தது முதல் நாளிலிருந்து, தனது தர்மத்திற்கு உரிய வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்தவர். தந்தையின் வாக்கை காப்பதற்காக 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். அவருடன் மாதா சீதையும், சகோதரன் லட்சுமணனும் சென்றனர்கள்.

சீதையின் அபரணமும், இராவணனின் அபகரிப்பும் :

வனவாசத்தின் போது சீதையை இராவணன் அபகரிக்க, ராமர் லட்சுமணன் மற்றும் ஹனுமான் உதவியுடன் லங்காபுரத்திற்குச் சென்று, இராவணனை வீழ்த்தி, சீதையை மீட்டுத் திரும்பினார். ராமரின் வாழ்க்கை முழுவதும் ஒரு தர்மயுத்தமாகவே இருந்தது. தனது தனிப்பட்ட உணர்வுகளை விட, சமூக நலனுக்காக முடிவெடுத்தவர். அரசனாக இருந்தபோதும், நீதியின் முக்கியத்துவத்தை மிகுந்த கவனத்துடன் பின்பற்றியவர். ராமாயணக் கதையை பல நாடுகளில் தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் பார்க்கலாம். ராவணனுடன் நடந்த கடைசி யுத்தத்தில், இராமரின் நாகாஸ்திரம் தாக்கியபோது ராவணன் தரையிலும் வீழவில்லை, பல்லாயிரம் ஆண்டுகள் செய்த தவங்களின் பலனாக அவனது உடல் நிலை மாறாமல் நின்றது. ஆனால் இறுதியில், தர்மத்திற்கு எதிரான அவரது செயல்கள் காரணமாக, இராமர் நியாயத்தோடு வெற்றி பெற்றார். இவ்விரு சக்திகளுக்கிடையே நடந்த இந்த சமரத்தில், ஒருபக்கம் தர்மம் – மறுபக்கம் அஹங்காரம் முடிவில், இறுதியாக தர்மமே வென்றது என்பதே இந்த ராமாயணத்தின் முக்கியமான போதனையாகும். தாய் சீதாவின் புனிதமும் ராமரின் தர்மமும் வென்றது

இக்கடைசி யுத்தம் இருவருக்கிடையேயான போர் மட்டுமல்ல; அது நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான நித்தியமான போராட்டத்தை பிரதிபலிக்கிறது. இராமர், தனது கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்தி, நியாயத்துடன் போராடி வெற்றி பெறுகிறார். இதன் மூலம், சக்தி இருந்தாலும்கூட அதைப் பயன்படுத்தும் முறையும் நியாயமானதாக இருக்க வேண்டுமென்ற ஒளி அறிவுரையையும் ராமாயணம் தருகிறது. ராவணனின் வீழ்ச்சி, தன்னம்பிக்கையை கடந்து சென்று ஏற்பட்ட அகந்தையின் விளைவாகும்.

இது இந்தியாவின் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு இலக்கிய சின்னமாக அமைந்துள்ளது. இந்த “ராமாயணம்” திரைப்படம், பாரம்பரிய காவியத்தை, ஹாலிவுட் தரத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்திற்கே காட்டும் மிகப்பெரிய முயற்சி. இது வெறும் ஒரு சினிமா அல்ல கலாசார அடுத்த கட்ட முன்னேற்றம். இந்த படம் இந்திய சினிமாவின் வரலாற்றில் பொன்னான அத்தியாயமாக இருக்கும் என்பது உறுதி.


Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்