KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

மஹாவதார் நரசிம்மா தமிழ் திரை விமர்சனம் – ஆன்மீகம், ஆக்ஷன், விஷ்ணுவின் பலம்

high

மஹாவதார் நரசிம்மா தமிழ் திரை விமர்சனம் – ஆன்மீகம், ஆக்ஷன், விஷ்ணுவின் பலம் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியான மஹாவதார் நரசிம்மா பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். நேரடியாக நமது Kingwoodsnews செய்தியாளர் வழங்கும் திரைவிமர்சனம்

சூடுபிடிக்கும் கதைக்களம் :

அசுரரான ஹிரண்யகசிபு (அ) இரணியன் காசிபர் – திதி தம்பதியரின் மகன். இரணியாட்சனின் அண்ணன். ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை பிடித்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். நேரில் வராத ஒருவரை கடவுள் என்பதா? அந்த விஷ்ணுவை கண்டுபிடித்து அழிப்பேன் என சபதமெடுக்கிறார் ஹிரண்யாக்ஷன். தன் அண்ணனிடம் ஆசிபெற்று மாதா பூமாதேவியை சிறைபிடித்து சமுத்திரத்தில் ஒளித்து வைக்கிறார். இதனால் பிரம்மதேவனிடம் தேவர்கள் மன்றாட வராக அவதாரத்தில் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யாக்ஷனுடன் சண்டையிட்டு அவரை வதம் செய்து பூமாதேவியை மீட்கிறார்.

வராக அவதார காட்சிகள் மிகவும் அருமையாக அனிமேஷன் செய்துள்ளார்கள் குறிப்பாக 3D-யில் பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.. இரணியாட்சனை வதம் செய்யும்காட்சிகள் நிஜ கதாபாத்திரங்கள் நடிப்பதுபோல அனிமேஷன் அமைத்துள்ளது.

மஹாவதார் நரசிம்மா ஆக்ஷன் காட்சி

இவ்வாறாக தம்பியை பறிகொடுத்த ஹிரண்யகசிபு தானே மூவுலகையும் ஆளும் கடவுளாக மாறுவேன் என்று கர்வத்துடன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் இருக்கிறார். நாட்கள் மாதங்கள் வருடங்கள் பல உருண்டோடின இறுதியில் கடும் தவத்தின் பலனாக பிரம்மதேவர் தோன்றினார் அவரிடம் வரம் கேட்க தொடங்குகிறான் மரணமில்லா வரவேண்டும் என்று கேட்க அதற்க்கு பிரம்மதேவர் மாற்றமில்லை வரம்தவிர வேறு எதுவாயினும் கேள் தருகிறேன் என்று கூற ஹிரண்யகசிபு இரவிலும் பகலிலும் மனிதனாலும் மிருகத்தலும் யஃச்சர்கள் தேவர்கள் அசுரர்கள் எந்த மனிதனாலும், உயிராலும், ஆயுதத்தாலும் தன்னை கொல்ல முடியாத வரத்தை கேட்கிறார் அதற்க்கு பிரம்மதேவர் தந்தாயிற்று என கூறி செல்கிறார். தனக்கு அழிவில்லை என மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்கிறார்.

ஆனால் அதேநேரம் ஹிரண்யகசிபு மனைவி கற்பதில் பிரகலாதன் உருவாகிறார் கர்பத்திலேயே நாரதர் என பல முனிவர்கள் சொல்ல பல ஹரி கதைகள் விஷ்ணு பற்றிய பல கதைகள் மந்திரங்கள் என கர்பத்திலேயே கேட்கிறார் பின்னர் பிறந்ததும்

எந்நேரமும் விஷ்ணுவின் துதி பாடுகிறார் விஷ்ணு பக்தங்க தன்னை அறிவித்து விஷ்ணு புகழ் பாடுகிறார். பிரகலாதரை விஷ்ணுவிடம் இருந்து பிரித்து ஹிரண்யகசிபு தான் கடவுள் என கூறு என்று பல கல்விநிலையங்கள் அனுப்புகிறார் கொடுமைசெய்கிறார் பல முறை எரிக்கவும் மலைமீதிருந்து கீழே வீசவும் விஷ பாம்புகளால் கடிக்கவும் செய்கிறார் இவ்வாறு பல கொடுமைகளை அனுபவித்த அசுர குலத்தைச் சேர்ந்த சிறுவன் பிரகலாதன் விஷ்ணுவை நேரில் பார்த்தாரா? ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு எப்படி வந்தது என்பதே மீதிக்கதை. 

படம் பற்றிய அலசல் :

பிரகலாதா உண்மைக்கதையை அனிமேஷன் வடிவில் இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார். படமுழுக்க டெக்னிக்கலாக அனிமேஷன் காட்சி கண்களுக்கு விருந்துதான். அந்த அளவிற்கு நேர்த்தியாக அனிமேஷனை கொடுத்திருக்கிறார். முக்கியமாக பரமாத்மாவான விஷ்ணுபகவான் வரும் காட்சிகள் சொல்ல வார்த்தையில்லை அருமை 100% படம்பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கவைக்கிறது. படம்பார்த்துவெளிவருபவர்கள் நிச்சயம் விஷ்ணு அவதார புத்தகங்களை வாங்கி நிச்சயம் படிப்பார்கள்.

நரசிம்மர் வரும் காட்சிகள் :

சொல்லவர்த்தைகள் இல்லை 3D பார்த்தல் நேரடியாக நரசிம்மரை தரிசித்து போல உள்ளது குறிப்பாக சண்டைகதிகளில் கூட நரசிம்மரின் முகன் பிரகாசமாகவும் சாந்தமாகவும் காட்சியளிக்கிறது இது பார்ப்போரை மெய்சிலிர்க்கவைக்கிறது

டப்பிங் எப்படி இருக்கு ?

இந்தி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து 2D, 3D என தத்ரூபமாக படமாக வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வசனங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அதேபோல் பாடல்களில் வரும் வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளன.படம் முழுக்க பின்னணி இசையில் ராஜாங்கம் போட்ட BGM அற்புதமாக அமைத்துள்ளது சாம்.சி.எஸ். குறிப்பாக கிளைமேக்சில் பின்னணி இசை மிரட்டல். படம்முடியும் வரை எங்கும் தொய்வில்லாத திரைக்கதை நம்மை திரையை விட்டு விலக விடாமல் பார்த்துக்கொள்கிறது.

பிரகலாதனை கொல்ல எடுக்கும் முயற்சிகளில் அவர் தப்பிப்பது எல்லாம் ட்விஸ்ட் மொமெண்ட்ஸ்தான் அந்த காட்சிகள் பார்ப்போரை பதறவைக்கிறது.இந்த சிறுவனை எப்படி கொல்வது என்று மலை உச்சியில் நடக்கும் காட்சிகள் செம எமோஷனல் டச். அடுத்து “மஹாவதார் பரசுராம்” படம் வரப்போவதை முடிவில் அறிவித்திருக்கிறார்கள் அதுவும் பக்திகாலந்த அடிதடியாக அருமையாக அமைத்துள்ளது. மொத்தத்தில் விஷ்ணு அவதார படத்தை அனிமேஷன் வடிவில் ரசிக்க கண்டிப்பாக இந்த “மஹாவதார் நரசிம்மா”வை தரிசிக்கலாம்.

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்