தேமுதிக பிரேமலதா சாமிதரிசனம் கூட்டணி அறிவிப்பு? திமுகவா? அதிமுகவா? தவெக-வா? ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அஷ்டமி திதியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் காமாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் பிரேமலதாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தேமுதிக பொறுத்தவரை திமுக போகலாமா அதிமுக போகலாமா (அ) விஜயியுடன் ஆட்சியில் பங்கு போகலாமா என குழப்பத்தில் இருக்கும்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா kingwoods news செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எப்போது கூட்டணி அறிவிப்பு :
இனிவரும் 8 மாதங்கள் தமிழகம் முழுக்க தொண்டர்கள் சந்திப்பு, டிசம்பர் 9 ஆம் தேதி மாநாடு அதன் பிறகு கூட்டணியை தனித்து போட்டியா என அறிவிப்போம். கூட்டணி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது அது இன்னும் முடிவுபெறவில்லை 5 மாதங்களில் கட்சியை மாவட்டம் வாரியாக பலப்படுத்துவோம் பிறகு கூட்டணி அறிவிப்போம் என கூறினார்.
விஜய் தமிழவெற்றிக் கழகம் கூட்டணி அழைத்தார் : விஜய் கூட்டணிக்கு நேரடியாக அழைக்காவிட்டாலும் விஜய் தேமுதிகவை எதிர்பார்க்கிறார் பேச்சுவார்த்தை நடக்கிறது விஜய் தேர்தலில் இதுவரை அவரின் பலத்தை நிரூபிக்கவில்லை அவரின் பலம் என்ன என்பதை தெரியாமல் கூட்டணி செல்லமுடியாது ஆனால் ஆட்சியில் பங்கு என்பது முற்றிலுமாக வரவேற்கத்தக்கது இதை திருமாவளவன் காங்கிரஸ் பாமக உள்ளிட்ட பல கட்சி வரவேற்கிறது ஆனால் பலமான கூட்டணி ஏன் விஜய் பக்கம் ஏன் அமையவில்லை விஜய் பலம் என்ன வாக்கு எண்ணிக்கை எவ்வள்வு என்று தெரியாத நிலையில் கூட்டணி செல்ல பிற கட்சிகள் தயங்குகிறது.
அதிமுக கூட்டணி ? திமுக கூட்டணி ?
எடப்பாடி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார் மழைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மக்களை சந்திக்கமுடியாமல் போய்விடும் என்று முன்கூட்டியே அவர் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிவிட்டார்.. திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் அந்தவாக்கு எடப்பாடி & அமிட்ஷா வியூகம் திமுக அதிருப்தி வாக்கு கூட்டணி வாக்கு மற்றும் இதுவரை தமிழகத்தில் கூட்டணி வெக்கத்தை ஒரு பெரியக்கட்சி கூட்டணி வரப்போகிறது என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமி கணக்கு எல்லாம் சேர்த்துப்பார்த்தால் நிச்சயம் அதிமுக வெல்லும் வாய்ப்பு தெரிகிறது ஆனால் மக்கள் கடைசி நேரத்தில் எந்த முடிவையும் மாற்றலாம் திமுக பொறுப்பாக்கம் பெண்களுக்கு இலவச பேருந்து மாதம் 1000 ரூ என இன்னும் தேர்தல் நெருக்கத்தில் பல அறிவிப்புகள் வரும் இது திமுகவுக்கு பிளாஸாக மாறவாய்ப்பிருக்கிறது பொறுத்திருந்து பாப்போம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்