KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

முதல்வர் ஸ்டாலின் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி ?

முதல்வர் ஸ்டாலின் விளம்பரத்திற்கு தடை வழக்கில் அதிமுகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி?

முதல்வர் ஸ்டாலின் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி ? திமுக ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்து பல விளமபரங்கள் சாலைகளில் மற்றும் ஊடகங்களில் என பல்வேறு இடங்களில் விளம்பரங்களை பார்க்கலாம் இது இப்படியே போனால் தமிழக அரசு மக்கள் திட்டங்கள் எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் புகைப்படம் திமுக பெயர் இடப்பெற்று மக்களை குழப்பும். தேர்தல் நெருங்கிவிட்டது தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் அமலில் உள்ள பழைய திட்டங்கள் என எந்தவிதமான திட்டங்களாக இருந்தாலும் அரசு சார்ந்த திட்டத்தில் விளம்பரங்களில், முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரித்த தலைமை நீதிபதி முக்கியமாக, அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் திமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

தேர்தல் வியூகம் :

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனல்பறக்கும் பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டார், திமுக ஒருபுறம் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்துவருகிறது இதற்க்கு போட்டியாக மக்கள் வேட்பாளர் உங்கள் விஜய் என மறுபுறம் விஜய் புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டி வந்திருக்கிறார்கள் இதை பார்த்த விஜய் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் நீக்கி என்னுடைய புகைப்படத்தை வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டார் பழைய ஸ்டிக்கர் நீக்கி புதிய ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கிவிட்டார்கள் விஜய் மதுரை மாநாடு பிரேமலதா விஜயகாந்த் கடலூர் மாநாடு அன்புமணி நடைபயணம் என தமிழ்நாடு விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில் திமுக ஸ்டாலின் புகைப்படம் தமிழக அரசு திட்டங்களில் புகைப்படம் இருக்கக்கூடாது என் தீர்ப்பளித்தது திமுகவிற்கு அதிரிச்சியளித்திருக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு நிலையில் நேற்று இரவு ராஜ விருந்து அளித்தார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மொத்தம் 108 வகையான உணவுகள் தடபுடலாக தயார் செய்யப்பட்டு அதிமுக, பாஜக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது சுவையாக அறுசுவை உணவை உட்கொண்டனர் .

இரவு விருந்தில் அதிமுக முக்கிய தலைவர்கள், பல் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி வேலுமணி மற்றும் பிற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர் உணவு விருந்து முடிந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது. பாஜக சார்பில் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர் குறிப்பாக அண்ணாமலை பங்கேற்கவில்லை.

அண்ணாமலை தலைவராக இருந்தபோது இருந்த நெருக்கத்தைவிட நைனார் நாகேந்திரனுடன் இருக்கும் நெருக்கும் அதிமுக தலைவர்களுக்கு அதிகமாகியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை கொண்டாடத்தொடங்கியிருக்கிறார்கள் ஏன் இந்த நெருக்கம் எடப்பாடி தலைமையில் கூட்டணி என்றா தேர்தல் நெருங்கிவிட்டது என்றா இவ்வளவவு நாள் இல்லாத இந்த நெருக்கம் இப்பொது எப்படி வந்தந்து என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை :

அதிமுக தலைமை பாஜக, அமமுக, தேமுதிக, பாமக, சீமான் ஆதரவு மற்றும் பிறக்கட்சிகள் என கூட்டணியை உறுதி செய்துவருகிறது திமுகவை வீழ்த்தவேண்டும் என்று உறுதியுடன் உள்ள காட்சிகள் அனைத்தும் அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என எடப்பாடி பழனிசாமி & அமிட்ஷா ஒரு சீனியர் குழு அமைத்து ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை செய்து நமது கூட்டணிக்கு பிற கட்சிகளை கொண்டுவாருங்கள் என்றும் கூறிவிட்டு அமிட்ஷா சென்றுள்ளதாகவும் அவர் சொன்னது போலவே பல கட்சிகள் இப்பொது அதிமுகவில் இணையத்தொடங்கியிருக்கிறது இதனால் இந்த பார்ட்டியை நைனார் நாகேந்திரன் வைத்துள்ளார் என ஒரு அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. மறுபுறம் திமுக கூட்டணி உடைக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தும் திருமாவளவன் உட்பட பல கட்சிகள் மறுத்திவிட்டதாக தெரிகிறது.

திருமாவளவன் தேமுதிக திமுக கூட்டணிக்கு வரவேண்டும் பிற காட்சிகள் பாஜக கூட்டணிக்கு செல்லக்கூடாது திமுக ஓரணியில் இணைய வரவேண்டும் என்று செய்தியாளர்சந்திப்பில் கூறியிருந்த நிலையில் தேமுதிக பிரேமலதா அவர்கள் கூட்டணிக்கு இன்னும் 4 மாதங்களில் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கிறேன் என்று kingwoodsnews செய்தியாளர் சந்திப்பில் அவர்கூறியிருந்தார். கடலூர் மாநாடு நடக்கும் நாள் அன்று கூட்டணி குறித்து அறிவிப்போம் இப்பொது விஜய்யுடன் செல்வதா? திமுக? மற்றும் அதிமுக ?அழைப்பை ஏற்பதா? என தனது கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. எப்போதும் தனித்து நிற்கும் சீமான் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியா இல்லையா என சொல்கிறேன் என்றார் ஒரு மாதம் முன்பு கூட்டணி இல்லை என்று சொன்ன சீமான் இப்பொது திமுக வெற்றிபெறக்கூடாது என்ற ஒற்றை குறிக்கோளுக்காக அதிமுகவிற்கு கூட்டணி வைப்பாரா அல்லது ஆதரவு தெரிவிப்பாரா என்று பொறுத்திருந்து பாப்போம்

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்