ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி! நடுவானத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து இந்தியாவின் கொல்கத்தா வழியாக மும்பைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் இன்று நடந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் தனது சேவையைத் தொடங்கிய Air India AI 174 என்ற அந்த விமானத்தில், பயணிகள் புறப்படுவதற்கு முன்பே கரப்பான் பூச்சி நடமாடியதாகக் கூறப்படுகிறது. உக்காரும் இடத்தில் பயணி செக் செய்துள்ளார் அங்கே இரு கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளது அதனை பார்த்த பயணி பயத்தில் கத்தியுள்ளார் அருகில் இருந்த Air hostess வரவே கரப்பான் பூச்சி பக்கத்துக்கு இருக்கைக்கு தாவியது அந்த இருக்கையில் இருந்தவரும் கத்த நடுவானில் ஒரே சலசலப்புதான்.
இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து உடனடியாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. விமானத்தில் பயணிகள் இருக்கைகளுக்கு அருகாமையில் கரப்பான் பூச்சி தென்பட்டதாகப் பயணிகள் கத்தி குற்றம் சாட்டினர். சர்வதேச விமானத்தில், அதுவும் நடுவானில் இவ்வளவு நீண்ட தூர பயணத்தில், கரப்பான் பூச்சி நடமாடியது விமானப் பாதுகாப்பிலும், சுகாதாரத்திலும் கடுமையான கேள்விகளையும் சந்தேககங்களையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து நமது டெல்லி kingwoodsnews செய்தியாளர் தொடர்புகொண்டபோது அவர்களின் விளக்கம்: “பயணிகள் இந்தச் சம்பவத்தால் பயத்தில் இரண்டு மூன்று பயணிகள் கத்தி கூச்சலிடவே அனைத்துப்பயணிகளும் அதிர்ந்தனர் இந்த கரப்பான் பூச்சியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். நீண்ட தூர பயணத்திற்குப் பல ஆயிரங்கள் செலவழித்து விமானத்தை புக் செய்து பயணிப்பவர்களுக்கு, இந்த அசுத்தமான சூழல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பயணிகள் தங்கள் அதிருப்தியை விமான ஊழியர்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர்”.
பயணிகளின் அதிருப்தி மற்றும் ஏர் இந்தியாவின் விளக்கம் :
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா உடனடியாக விளக்கமளித்துள்ளது. “இந்த விவகாரம் ஏர் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் சமையலறையில் இருந்துதான் கரப்பான் பூச்சி வந்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கரப்பான் பூச்சி கண்டறியப்பட்ட அந்த விமானத்திற்கு உடனடியாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்,” என ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தம் மற்றும் பாதுகாப்பு கேள்விகள் : ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி! நடுவானத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி
இந்தச் சம்பவம் விமான நிறுவனங்களின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஒருமுறை விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சர்வதேச விமானங்களில் கரப்பான் பூச்சி எப்படி நுழைய முடிந்தது அது பயணிகளின் பை உள்ளே இருந்து வந்ததா இல்லை விமானத்தில் வேலைசெய்பவர்களிடமிருந்து வந்ததா என்பதும், விமானப் புறப்பாட்டிற்கு முன் மேற்கொள்ளப்படும் சோதனைகள் முறையாக நடைபெற்றனவா என்பதும் முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளது. ஏர் இந்தியா தனது சேவைத் தரத்தை மேம்படுத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அதன் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏர் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்து (தமிழ்நாடு) சென்னை நோக்கி புறப்பட வேண்டிய ஏர் இந்தியாவின் AI349 விமானம், ஆகஸ்ட் 3ஆம் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் எயர்பஸ் A321 வகையை சேர்ந்தது. புறப்படுவதற்கு முன்னர் விமானத்தில் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து Air இந்தியா விமானத்திற்கு சிக்கல்மேல் சிக்கல் வந்துகொண்டிருப்பது பயணிகளுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவை No 1 இடத்துக்கு வந்துடுச்சு
இந்த தொழில்நுட்ப பிரச்சனையை சரிசெய்ய அதிக நேரம் தேவைப்பட்டதால் விமானம் இயக்கப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பயணிகளுக்காக விரைவில் மாற்றுவிமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு, விமானம் ரத்து காரணமாக முழுமையான பணத் திருப்பிச் செலுத்தல் (அல்லது) இலவசமாக மீண்டும் பதிவு செய்யும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
இது போல இதற்குமுன்பும் 2025 ஜூன் 12 அன்று, ஏர் இந்தியா AI171 (Boeing 787‑8 Dreamliner) லண்டன் நோக்கிச் செல்லும் போது, அஹமதாபாத் விமானத்திலிருந்து புறப்படும் சில நிமிடங்களில், சுமார் 242 பேர் (230 பயணிகள் + 12 விமானக் குழு), விமானம் மெகஹனி நகர் பகுதியில் உள்ள B.J. மருத்துவக் கல்லூரி ஹோஸ்டல் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மக்களின் கோரிக்கை இதுபோல சிறு குளறுபடிகள் இல்லாமல் பாதுகாப்பாக அணைத்து பராமரிப்புக்களை air india செய்யவேண்டும் பயணிகளை மேலும் அதிக கவனத்துடன் பாதுகாப்பாக அழைத்துச்செல்லவேண்டும் பயணத்திற்கு முன்பே குளறுபடிகளை சோதித்தல் போன்றவை நடைபெறவேண்டும் பயணத்தின் பொது எந்த சிறு இடர்பாடுகளும் குளறுபடிகளும் நடைபெறக்கூடாது.
சமீபத்தில் ஏர் இந்தியா மற்றும் பிற விமான சேவைகளில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தாமதங்கள் பயணிகளிடையே கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது இது குறித்து பல செய்திகளும் வந்தன. விமானங்களின் பாதுகாப்பு என்பது ஏற்கெனவே பல கட்டங்களில் பரிசோதிக்கப்படுவதாக இருந்தாலும், பராமரிப்பு பிழைகள் சில நேரங்களில் பெரிய ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். வானூர்தி எப்போது இறக்கத் தயாராகின்றது, எப்போது பறக்கின்றது என்பதிலிருந்து விமானவியலாளர்கள் செய்யும் மின், எந்திர பரிசோதனைகள் வரை, ஒவ்வொன்றும் மிகுதியான கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதுகுறித்து ஜோதிடர்களும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர் இப்பொது கிரக நிலைகள் சரியில்லை அதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல… மனித கவனமும் முக்கியம்!
விமானங்கள் வெறும் இயந்திரம் அல்ல; அதனை இயக்கும் மனிதர்களும் பாதுகாப்புக்கு பொறுப்பாளிகள். விமான இயக்குநர்கள் (Pilots), ஏர் ஹோஸ்டஸ்கள், மேனேஜ்மென்ட் அதிகாரிகள் இவர்களில் எவருக்கும் சிறிய தவறே ஒரு பெரிய அபாயத்திற்கு காரணமாக மாறக்கூடும். அதனால்தான் பயிற்சி, சீரான பரிசோதனைகள், செயல்முறை மீட்டெடுப்புகள் என்பவற்றில் கண்டிப்பான கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. உலகளவில் சில முன்னணி நிறுவனங்கள் AI அடிப்படையிலான தொழில்நுட்ப பராமரிப்பு முறைகளை செயல்படுத்தி வருகின்றன இது இந்திய விமான சேவைகளிலும் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும். மிகுந்த பாதுகாப்பிற்கு இது வழிவகுக்கும்.
மக்கள் வேண்டுகோள்: விமான பயணத்தை உயிர்வாழும் நம்பிக்கையாக்குங்கள்!
kingwood News Reporter மக்களிடம் வினமான குளறுபடிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு விடையளித்த மக்கள் ஒரே கருத்துதான் அனைவரின் பதிலாக இருந்தது “டிக்கெட் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை, பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து சேரவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்,” என பயணிகள் குரலெழுப்புகின்றனர். ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகள் நம்பிக்கையை மீட்டெடுக்க, தனிப்பட்ட பாதுகாப்பு குழுக்கள், அவசர நடவடிக்கை திட்டங்கள், பயணக்கட்டுப்பாடு சோதனைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் ஏற்கெனவே விமான சேவைகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிற நிலையில், பாதுகாப்பில் சிறிதளவும் பின்வாங்கும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படக்கூடாது என்பதே மக்களின் கருத்தாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்