அன்புமணி குறிவைத்து ஸ்கெட்ச் – ராமதாஸ் பதில் பாமக சிறப்புப் பொதுக்குழுவில் “IF YOU ARE BAD.., I AM YOUR DAD..” என்ற போட்டோவுடன் ராமதாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு வந்து அன்புமணிக்கு எதிராக பெரும் எதிர்ப்பை செய்துள்ளார். இது அன்புமணிக்கு எதிராக நேர்த்தியான பதிலாக பார்க்கப்படுகிறது, இது பலத்த அவமானமாக கருதப்படுகிறது அன்புமணி இதைத்தொடர்ந்து என்ன செய்வார் என்று தெரியவில்லை அவர் இந்த பொதுகுழுபிறகு தனது இல்லத்தில் ரகசிய மீட்டிங் நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது.
பாட்டாளி கட்சி அன்புமணி தலைமையேற்று ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி பொதுக்குழு நடைபெற்றது அனைவரும் அறிவோம் இப்பொது புதியதாக புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. , தற்போது ராமதாஸ் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டி இருக்கிறார். இப்பொது நடைபெற்ற புதிய பொதுக்குழுவில் மாவட்டத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகள், பொதுக்குழு மெம்பர்ஸ் என்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர். இந்த கூட்டத்தை பார்த்த ராமதாஸ் பேசியதாவது அன்புமணியை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து பெறியிருக்கிறார். கூட்டணி நான் முடிவெடுக்குறதான் நடக்கும் வெறும் யாரும் தலையிடமுடியாது என்று ஓரே போடு போட்டுள்ளார்.
அன்புமணிக்கு எதிராக 6 ஆயிரம்பேர் திரண்டது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்த உச்சத்தை தொட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழுவில் அதிரடியாக அனைவரின்முன்பும் ராமதாஸ் அவர்களை தலைவராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பாமகவில் மேலும் குழப்பத்தையும் அன்புமணி டீமுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது இனி அரசியலில் அதிரடியாக இருக்கும் என்று ராமதாஸ் பேசியிருக்கிறார
இப்பொது நடந்துட்டு இருக்குற பொதுக்குழுவில் ராமதாஸ் கூறியதாவது அன்புமணி கூடிய பொதுக்குழு போல இங்குக் இருக்குற கூட்டம் காசுக் கொடுத்து அழைத்த கூட்டம் இல்ல. சொந்தமாகக் கடின உழைப்பால் கூடிய கூட்டம். ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இங்குத் தீர்மானம் போடல. ஒட்டுமொத்த தமிழநாட்டிற்கும் செத்துத்தான் அனைத்து ஜாதிக்கும் செத்துத்தான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கோம். அனைத்து சமுதாயங்களும் என் பின்னால் வந்தால் புதிய தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பேசினார்.
அன்புமணி செய்த தவறுகள் :
- என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வெச்சது தப்பு
- என் அனுமதி இல்லாம பொதுக்குழு கூடியது தப்பு
- என் அறிவுரை இல்லாமல் என் அனுமதி இல்லாமல் நடைபயணம் செல்வது தவறு
- என்ன பார்க்க வருபவர்களை மிரட்டி பண ஆசை பதவி ஆசை காட்டி அன்புமணி பக்கம் திருப்புவது தவறு
என இப்படி பலன் அன்புமணியின் தவறுகளை புட்டு புட்டு வைத்தார் பாமக நிறுவுனர்.
வன்னியர் இடஒதிக்கீடு :
2026 கூட வரப்போகிறது என்னையா 10.5% இட ஒதுக்கீடு ஸ்டாலின் அரசு நினைத்தால் ஒரே நாளில் பெற்றுத்தரலாம் ஆனால் இந்த அரசு அதை செய்யாது. சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியும் ஆனால் கணக்கெடுப்பு நடத்தாமல் சைலண்டாக உள்ளது நடத்தினார் உண்மை தெரிந்துவிடுமா எதுக்கு இந்த தாமதம் செய்கிறது. அதேபோல் அன்புமணியின் இடத்தில் ராமதாஸ் தனது மகள் காந்திமதியை அமர வைத்தது அன்புமணியை அதிரவைத்துள்ளது. இது ராமதாஸின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. மகன் அன்புமணிக்கு எதிராக வலிமையான நபர் இருக்க வேண்டும் என்று எண்ணி மகளைக் கொண்டு வர ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதால், பாமகவினர் மத்தியில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று புரியாமல் குழம்பி இருக்கின்றனர்.
ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவரின் ஆதரவாளர்கள் :
மகன் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் எதுக்கு நடவடிக்கைகள் பாமகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ராமதாஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவரின் ஆதரவாளர்கள், அன்புமணி மீது பலபுதிய விமர்சனங்களை முன் வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் IF YOU ARE “IF YOU ARE BAD, I AM YOUR DAD” என்று பதாகைகளுடன் ராமதாஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். தந்தையின் சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பாடல் வரிகள் பதாகைகளில் எழுதி ராமதாஸ் சப்போர்ட்டர்ஸ் காட்டியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதனால் விரைவில் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது அரசியல் விமர்சகர் kingwoodsnews-க்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணி தலைமையிலான பாமகவையே அங்கீகரித்திருப்பதால், பாமகவில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அன்புமணி செய்யும் எதற்கும் நான் பொறுப்புஇல்லை நமது கட்சி தொண்டர்கள் யாரும் அன்புமணிபக்கம் போகாதீங்க என்று உரக்க பேசினார், அன்புமணி என் பேச்சைகேக்காம என் அனுமதி இல்லாம நடைபயணம் போறது தொண்டர்களை சந்திப்பது தவறு இவ்வள்வு நாள் என்ன பண்ணிட்டு இருந்த வீட்டுல சும்மாதானே தூங்கிட்டு இருந்த அப்போ போகவேண்டியதுதானா இப்போ கபட நாடகம் அடித்து இருக்கியா அன்புமணி என்று விமர்சித்தார்
அன்புமணி குறிவைத்து ஸ்கெட்ச் – ராமதாஸ் பதில்
அன்புமணி பொறுத்தவரை திமுக எதிர்ப்பாகவே உள்ளது ராமதாஸ் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாக உள்ளது கட்சிக்கு உள்ளே இதுபோல சலசலப்பு உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்குறார்கள் தந்தை மகன் சண்டை முடிவுக்கு வரவேண்டும் இது நீடித்தால் திமுகவுக்கு பலமாக மாறும் வாய்ப்பு உள்ளது ஏற்கனவே பாஜக அதிமுக பிரச்னை மனஸ்தாபங்கள் அதிமுகவில் பிரிவு தினகரன் ஓபிஎஸ் சசிகலா என உட்பிரிவு எடப்பாடி எதிர்ப்பு என பல சாதகமாக இல்லதசுழலில் பாமகவும் இப்படி இருந்தால் அது திமுகவிற்கு பலமாக மாறும் வாய்ப்பு உள்ளது அதனால் எடப்பாடி பாமக அன்புமணி மாற்று ராமதாஸ் இடம் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பேசியதாக தெரிகிறது. அண்ணாமலை நைனார் நாகேந்திரன் உட்பட பல தலைவர்கள் இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றும் பேசிவருகிறார்களாம் இப்பொது நமது ஒற்றுமை முக்கியம் இது 2026 தேர்தலில் தோவியாக மாறக்கூடாது என்று கூட்டணி தலைவர்கள் நினைக்கிறார்களாம் இதற்க்கு அன்புமணி ராமதாஸ் என்ன செய்யப்போகிறார்கள் எந்த பொதுக்குழு செல்லும் எது செல்லாது தந்தை பேச்சை மகன் கேட்பாரா அல்லது மகன் பேச்சை தந்தை கேட்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்