சென்னை வேளச்சேரி சேர்ந்த இளைஞர் ஒருவர் நொறுக்குத் தீனி தின்று விட்டு குளிர்பானம் அருந்தியதால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு 25 வயதாகிறது. இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள ஒரு இடத்தில் நண்பர்களுடன் இறகுபந்து விளையாடிவிட்டு மிகவும் சோர்வாக இருந்த சதீஷ் அருகில் உள்ள ஒரு கடையில் நொறுக்குத் தீனியும் மற்றும் குளிர்பானத்தையும் வாங்கியுள்ளார். நொறுக்கு தீனியை தின்று விட்டு உடனே அந்த குளிர் பானத்தை அருந்தி உள்ளார் சிறிது நேரம் கழித்து அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி காரணமாக துடிதுடித்து உயிரிழந்தார்.


நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களை அருந்தி விட்டு பனையூரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போதுதான் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அப்போது மூச்சு திணறல் ஏற்பட்ட அவரை, அவரது நண்பர்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிலைமை மோசமாக உள்ளதால் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சதீஷ் கொண்டுவரப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதனை செய்வதற்கு முன்பே வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு நண்பர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி அது அந்த நிறுவனத்தின் ஒரிஜினல் குளிர்பானம் போலவே நமக்கு அடையாளப்படுத்தி சில பெட்டி கடைகளில் விற்கின்றனர். இவர்கள் அதைத் தயாரிக்க சிறிய கூடாரம் அமைத்து ஆங்காங்கே சில குளிர்பானங்களை தயாரிக்கின்றனர். அந்த குளிர்பானங்கள் முறையாக தயாரிக்கப்படுவதல்ல உயிருக்கு ஆபத்தாகும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதை உண்பதனால் வாந்தி, பேதி ,மயக்கம் என உடல் மிகவும் பாதிக்கப்படுகிறது. தற்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழக்கவும் இது காரணமாகிறது. அதனால் இதுபோன்ற குளிர்பானங்கள் அறவே முடிந்த அளவுக்கு தடுத்து நிறுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
