நான் இந்து தான் இந்துக்களை இரண்டு வகையாக பிரித்து கொள்ளலாம் என பேசியுள்ளார் ஆ ரா
அவர் இதற்க்கு முன்பு இந்துகளை பற்றி அவதூறாக பேசியபோது மன்னிப்பு கேட்கும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு :- “என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள், நான் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பு கேட்காதவன் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. மன்னிப்பு கேட்பவன் தான் மனிதன். அதனால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் ? என சொல்லுங்கள். நான் கூறியது சரியானது. இந்துக்களில் இரண்டு வகைப்படும், ஒருவர் பிராமணர், மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்கள் அந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தேவர், வன்னியர், செட்டியார், முதலியார் போன்ற அனைவரும் வருவார்கள்.

இவர்கள் ஒருபுறம் பிராமணர்கள் ஒருபுறம் என இவர்கள் பிரித்து வைத்து இருக்கின்றனர். நான் பிராமணர்களாக இருக்கும் இந்துக்களை மட்டும் தான் கூறினேன் என மறைமுகமாக தற்போது பிராமணர்களை மட்டும் தாக்கி பேசி மற்ற இந்து சமுதாய மக்களுக்கு மன்னிப்பு கேட்டுகிறேன் என்பது போல அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் அப்போது படு வைரலாகி சமூக வலைதளத்தில் பரவி வந்தது.
தற்போது இது குறித்து பேசி உள்ள ஆ ராசா அவர்கள் “நான் இந்து தான் ஆனால் சனாதன இந்து அல்ல, இந்து என்பது இரண்டு வகைப்படும். இனிமேல் அதை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். நான் கூறியது சனாதன இந்துக்களை மட்டும் தான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, படிப்பறிவு இல்லாத திராவிட ஆட்சியால் காப்பாற்றப்பட்ட இந்துக்களுக்கு எல்லாம் நான் எதிரி ஆனவன் அல்ல. என் மீது வழக்கு போடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள். வழக்கு போடுங்கள் அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்” என மீண்டும் மேடையில் ஆவேசமாக பேசியுள்ளார். ஆ ராசா.
