ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நடைபெறும், தமிழ்நாட்டிலுள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்பு எண்ணை, அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது, வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை ( காலை 10.30 – மாலை 5.15 வரை) தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் நடைபெறும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதினால் வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 100யூனிட் இலவசம் மின்சாரத்தில், கைத்தறி – விசைத்தறி, மின்நுகர்வோர்களுக்கான மானியத்தில், குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.


